கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி
கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி சென்ற நான்கு வருடங்களாக இலங்கையில் சமாதானம் மனித உரிமை சக சீவியத்திற்காக குரல் கொடுத்து வருவதுடன் , கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தீர்க்கமானதும் தெளிவானதுமான நிலைப்பாட்டினை முஸ்லிம்களின் நீண்ட கால அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டு எடுத்து வந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்கும் தற்காலிக வளம்படுத்தலுக்கும் அப்பால் நீண்ட காலத்தில் முஸ்லிம்கள் சக இனங்களுடன் பிரிவினை தவிர்த்து ஐக்கியமாக சம உரிமையுடன் வாழ்வதற்கு தகுந்த உபாயங்களை வகுத்து செயற்படுவதுடன் கிழக்கினை மூவினமும் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் வாழும் சமூகச்சூழலை ஏற்படுத்த பல வேலைத்திட்டங்களையும் முன்வைத்து வருகிறது. அந்த வகையில் சர்வ கட்சி கூட்டத்தில் சமூக அக்கறையுள்ள புத்தி ஜீவிகள் சிவில் நடவடிக்கை செயற்பாட்டாளர்கள் என்ற அருகதையுடன் ஒரு முன்னுதாரணமாக கிழக்கு மாகாணத்தை கொள்ள வேண்டும் என்றும் ; மாகான அடிப்படையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் , அது குறித்து தீர்வுப் பிரேரணை ஒன்றினையும் சர்வ கட்சி மாநாட்டின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களிடம் கையளித்ததுடன் , எமது சார்பில் எமது பிரதிநிதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன் இன்றைய ஜனாதிபதி இலங்கை சகலருக்கும் சொந்தமான நாடு என்ற உணர்வினை ஏற்படுத்தக் கூடியவர் என்ற நம்பிக்கை முளைவிடத்தொடங்கிய வேலையில் தான் மீண்டும் இனவாத பிரிவினைச்சக்திகள் இந்தத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக களத்தில் இறங்கி உள்ளனர். முஸ்லிம்கள் , குறிப்பாக வடக்கு கிழக்குவாழும் முஸ்லிம்கள், தமிழர்கள் இன்று உள்ள நிலைமையை தொடர்ந்தும் பேன , இன ரீதியில் பிரிவினைக்கிட்டுச்செல்லும் சக்திகளுக்கும் பிரிவினைகெதிரான சக்திகளுக்குமான தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தலை அடையாளங்கண்டு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோளாகும். மலையக மக்கள் வடக்கு கிழக்கு மாகான தமிழ் மக்கள் என இலங்கையின் பல சிறுபான்மை சாகியங்களில் பெரும்பான்மையானோர் இன்று தேசிய நீண்ட கால நலனை அடிப்படையாகக்கொண்டு இணைந்திருக்கும் இந்த தேர்தலில் நாமும் எமது ஒற்றுமையை காட்டி நமது உரிமைகளை நட்புடனும் உரிமையுடனும் வென்றெடுப்போம். மீண்டும் ஈம்து நாட்டை இரானுவச்சூழலுக்குள் தள்ளுவதிலிருந்து பாதுகாப்போம்; ஓன்று பட்டால் உண்டு வாழ்வு எனபது யாருடன் ஒன்றுபடுவதைப் பொறுத்தது என்பதை உணர்ந்து செயற்படுவோம். முஸ்லிகளுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுகிறார் என்ற வதந்தி மிகைத்திருக்கும் சூழலில் "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பதரிது " என்ற பொய்யா மொழிககிணங்க பொய்களை கேட்டு ஏமாறாமல் உண்மை நிலை பகுத்தறிந்து இந்தத் தேர்தல் இலங்கையில் குழப்பம் விளைவிக்கும் சக்திகளுக்கு எதிரான தேர்தலாகும் என்பதை உணர்ந்து செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். நன்றி
இவ்வண்ணம்
யு . முகமது
செய்தி பிரிவு செயலாளர்
கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி
0 commentaires :
Post a Comment