மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத் தாளர் பேரவை மட்டக்களப்பில் தைப் பொங்கல் கவியரங்கும் உரையரங்கும் நடத்தியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் தலைவர் அன்பழகன் குரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கி வர வா எனும் தலைப்பில் கவியரங்கும், தமிழர் பொங்கலும் மட்டக்களப்பு பாரம்பரியமும் எனும் தலைப்பில் உரையரங்கும் நடைபெற்றது.
செங்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற தைப்பொங்கல் கவியரங்கில் திருமதி இந்திராணி புஸ்பராஜா கி. சிவலிங்கம் லோரன்ஸோ, ஊடாடி ஆகிய கவிஞர்கள் பங்குபற்றினர். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசா லையின் பிரதி அதிபர் கே. மகாலிங்கம் உரையரங்கை நிகழ்த்தினார்.
0 commentaires :
Post a Comment