1/20/2010

ஜனாதிபதியை ஆதரிக்க பட்டதாரிகள் மன்றம் தீர்மானம்


நாட்டில் தலைவிரித்தாடிய பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்தியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவமேயாகும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையடுத்து மக்கள் அச்சமின்றி வாழ முடிகிறது. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் மன்றம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக பட்டதாரிகள் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

யுத்தம் நடைபெற்ற நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அபிவிருத்தியை மறந்துவிடவில்லை. பல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. கிராமப்புறங்களில் பாதைகள் சீரமைக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் ஐந்து பாரிய துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகப் பெரிய துறைமுகம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படுகிறது. இவை மட்டுமன்றி மேல் கொத்மலை, நுரைச்சோலை ஆகிய மின்சார திட்டங்களும் அபிவிருத்தியின் உதாரணங்களாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க தீர்மானித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



0 commentaires :

Post a Comment