1/08/2010
| 0 commentaires |
இலங்கையைப் பற்றி தேவையான விதத்தில் ஐ.நா. சபை அறிக்கைகளை வெளியிட முடியாது இறைமைமிக்க தனித்துவ நாட்டைப்பற்றி அறிக்கை விடுவதை எதிர்க்கிறோம் - ஜனாதிபதி
இலங்கை இறைமை மிக்க தனித்துவமான நாடு. எமது நாட்டைப்பற்றி தமக்குத் தேவையான விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகள் வெளியிட முடியாது. அதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது இராணுவ த்தினர் நேர்மையானவர்கள். எவருக்கும் எப்படியும் பொய் சாட்சி கூறமுடியும். எனினும் எமது பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை எம்முடன் கலந்துரையாடியே முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ‘செனல் 4’ விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் 10.00 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றை வெளியிட முடிவு செய்திருந்ததையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நேற்று அம்பாந்தோட்டை மெதமுலனவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எமது இராணுவத்தினர். ஒழுக்கமுடையவர்கள், குற்றமிழைக் காதவர்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த எவரையும் அவர்கள் சுடவுமில்லை; சுடுவதற்குத் தயாராகவு மில்லை. இது எமது இராணுவத்திற் கெதிரான பெரும் அவதூறாகும் பிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச் செல்வனின் குடும்பத்தினர், தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோர் இன்னும் உயிருடன் வாழ்கின்றனர். அவர்களைப் படையினரே பாதுகாத்தனர். எமது படையினர் அத்தகைய கொடூரமானவர்களாக இருந்தால் இவர்கள் மிஞ்சியிருக்க மாட்டார்கள். ஆட்சியைப் பிடிக்கும் சுயநலத்தில் சரத் பொன்சேகா செயல்படுகிறார். எமது மக்கள் இத்தகைய பொய்களுக்குச் சோரம் போபவர்களல்ல, என்ற நம்பிக்கை எமக்குண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அம்பாந்தோட்டை மெதமுலனவில் ‘சணச’ கூட்டுறவுத்துறை விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எம்.பி. நேற்றுத் தமிழில் வெளியிட்ட அறிக்கை பெரும் அச்சுறுத்தலா னது. உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மீள்குடியேற்றம், தனித்துவமான நிர்வாகம், புலிச்சந்தேக நபர்கள் அனைவரையும் விடுதலை செய்தல் போன்ற நிபந்தனைகளை முன்கொண்டதாகவே இந்த அறிக்கை அமைந்திருந்தது. எனக்கு இதுவொன்றும் புதுமையான தாகப் படவில்லை. ஏற்கனவே தனியான நிர்வாக அதிகாரத்தை எழுத்து மூலம் வழங்கியவர்களே இத்தகைய நிபந்தனை களுக்கு அடிபணிந்துள்ளனர். நாம் இன்றைய இலங்கையைப் பற்றி மட்டு மன்றி எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தே செயற்படுகின்றோம். 2020 ல் இந்நாடு எவ்வாறு உயர்வடைந்திருக்கவேண்டும் என்ற இலக்கை முன்கொண்டே எமது திட்டங்கள் அமைந்துள்ளன. இந்த நாட்டைத் துண்டாடுவதற்குத் துணைபோன ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன் ஆகியோரோடு சம் பந்தன், பிரேமச்சந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு உறுப் பினர்கள் தற்போது சரத் பொன்சேகாவோடு இணைந்து கொண்டுள்ளனர். நேற்று திருகோணமலை எம்.பி. ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவோடு ஏற்படுத்திக்கொண்ட நிபந்தனைகளை வெளிப்படுத்தினார். அவர் தமிழ் மொழியில் தொலைக் காட்சியில் பகிரங்கமாக அதனை வெளிப்படுத்தியதனால் பெரும்பாலானோ ருக்கு அது புரிந்திருக்காது. அவ் வெளிப்பாடானது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தரக்கூடியது என்பதை சகலரும் உணரவேண்டும். நான் பிரதமராக பதவி வகித்தபோது புலிகளின் பகுதிக்கு போக முடியாத நிலை இருந்தது. சீருடையுடன் எமது படையினர் அங்கு செல்ல முடியாத நிலையே காணப்பட்டது. கச்சேரி, பொலிஸ், நீதிமன்றம் என அனைத்தும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. இதற்கெதிராக செயற்படுவதற்காகவே மக்கள் என்னை நியமித்தனர். பயங்கரவாத த்தை ஒழித்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை மக்கள் எனக்கு வழங்கினர். நான் அதனை முழுமையாக நிறைவேற்றி யுள்ளேன். நாட்டை மீட்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்பியுள்ளதுடன் அரச துறை மேம்பாடு, அரச ஊழியர்கள் சம்பள உயர்வுடன் சுமார் 5 இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளேன். நுரைச்சோலை, மேல் கொத்மலை, கெரவலபிட்டிய உட்பட மின் உற்பத்தி திட்டங்கள் பாடசாலைகள், வீதிகள், மருத்துவமனைகள் என சகல பிரதேசங் களிலும் நாம் நிர்மாணித்துள்ளோம். இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம். இத்தகையவற்றை நிறைவேற்றிவிட்டே மக்கள் முன் வந்துள்ளேன். இந்த நாட்டை எமது எதிர்கால சந்ததியினருக்காகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே எமது அடுத்த இலக்கு. எதிர்காலத்தைப் பாதுகாத்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் எனது பயணத்தில் சகலரும் கைகோர்த்துச் செயற்பட முன்வரவேண்டும். மக்கள் எம்முடனேயே உள்ளனர் என்ற பூரண நம்பிக்கை எனக்குண்டு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சணச கூட்டுறவுத் துறையினருக் கான விருதுகளை இந்நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ உரியவர்களுக்குக் கையளித்த மையும் குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment