1/22/2010
| 0 commentaires |
கிழக்கின் உதயம்
சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றை மாற்றிய போர், புலிப் பயங்கரவாதிகள் மாவிலாறு வான்கதவை மூடியதையடுத்து ஆரம்பமானது. மாவிலாறு வான்கதவைக் கைப்பற்றி மக்களுக்கு உரித்தாக்கியதைத் தொடர்ந்து 2007 யூலை மாதத்தில் தொப்பிகலையை விடுவித்து, கிழக்கு மாகாணம் முழுவதையும் விடுவித்துக் கொண்டோம். அதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டம் இன்றுவரை மிக வெற்றிகரமாக நடைபெறுகின்றது என்பதை நான் பெரும் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றேன் * தற்பொழுது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மூன்று மாவட்டங்களிலும் பிரதான பாதைகள் அனைத்தும் விரிவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. கிழக்கை விடுவித்துக்கொண்டதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் தென்பகுதி, சப்பிரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்துக்கும் துரிதமான தொடர்பை ஏற்படுத்தி பொருளாதார மற்றும் சமூகத் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கு காரைதீவு மற்றும் பொத்துவிலில் இருந்து சியம்பலாண்டுவ, மொனராகலை ஊடாக உள்ள அனைத்துப் பாதைகளையும் அபிவிருத்தி செய்தேன். * பாணமவிலிருந்து புல்மோட்டை வரை கிழக்கு கரையோரப் பாதையையும் கந்தளாய் சேருவிலப் பாதையையும் அவசர அவசரமாக உருவாக்குகின்றோம். கிழக்கு மாகாணத்தில் எஞ்சியுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்து நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கிடையில் உள்ள பொருளாதார சமூக அரசியல் தொடர்புகளை மேம்படுத்துவேன். * மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வடமத்திய மாகாணத்துக்கும் கொழும்புக்கும் துரித போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மரதங்கடவெல, பொலநறுவை, திரிகோணமடுப் பாதைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் இறக்கண்டிப் பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் யான் ஓய பாலம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துப் பாலங்களின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. * அம்பாறை மாவட்டத்தில் அறுகம்குடாப் பாலம் திறக்கப்பட்டுள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பாலமும் புதிய கல்லடிப் பாலமும் மக்களுடைய உரிமைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 59 புதிய நீர் வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரதான நீர்த்தாங்கிகள் 12 அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. * புதிதாக 164 பாடசாலைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 327 கட்டடங்கள் புனரமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலையும் நவீன விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணனி நிலையத்தையும் கொண்டதாக அமைக்கப்படுகின்றது. * சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக வைத்தியசாலைகளுக்காக புதிதாக 55 வார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 445 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். * வாழ்வாதார அபிவிருத்திக்காக 80,000 ஏக்கர் வயல்கள் பயிரிடப்பட்டுள்ள அதேநேரம், 2500 வீட்டுத் தோட்டங்களும் 19 பழக் கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தொடர்ந்தும் மேற்குறிப்பிட்ட பயிர்ச் செய்கையை மேம்படுத்தி புதிய சந்தை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவேன். * பால் உற்பத்தி செய்கின்ற விவசாயத்தை மேம்படுத்துவதற்காக புதிதாக 3 மாதிரிப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பால் உற்பத்தி செய்கின்ற 50 கிராமங்களை அமைத்துள்ளேன். கட்டாக்காலியாகத் திரிந்த 85,000 மாடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளேன். இக்கிராமங்களுக்குத் தேவையான வசதிகளையும் கடன் சலுகைகளையும் தொடர்ந்தும் வழங்கி அவ்விவசாயிகளின் எதிர்காலத்தை தொடர்ந்தும் பலப்படுத்துவேன். எதிர்வரும் தசாப்தத்தில் இம்மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்து அதன் பெறுபேறுகளை மக்களிடையே பகிர்ந்தளிப்பது எனது ஒரே நோக்கமாகும். * ஏற்றுமதி தயாரிப்புப் பிராந்தியம் ஒன்றை ஆரம்பிப்பேன். * அபிவிருத்திக்காக புதிதாக 100,000 ஏக்கர் வயல்களில் பயிர் செய்ய வழி செய்வேன். 5,000 வீட்டுத் தோட்டங்களையும் 100 பழக் கிராமங்களையும் உருவாக்குவேன். * பால் உற்பத்தி செய்கின்ற தொழிலை மேம்படுத்துவதற்காக புதிதாக மூன்று மாதிரிப் பண்ணைகளை உருவாக்கியுள்ளதுடன், பால் உற்பத்தி செய்கின்ற 100 கிராமங்களை அமைத்திருக்கிறேன்.
0 commentaires :
Post a Comment