1/10/2010

பிணங்களை வைத்து நடத்ததும் பிழைப்பு தொடர்கின்றது.



வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.கள் இறுதி அஞ்சலி


வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வே .பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்ச்நதிரன் ,சொலமன் சிறில் ,பத்மினி சிதம்பரநாதன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் , வினோ நோகதாரலிங்கம், கே .துரைரட்ணசிங்கம் ,டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் கூட்டாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்திய நாடாளுமுன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் உட்பட தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த 3 பிரமுகர்களும் தமது அஞ்சலியை செலுத்தினர் .

அன்னாரின் பூதவுடல் இன்று தீருவில் சதுக்கத்திலிருந்து நண்பகல் 12.00 மணிக்கு அவரது உறவினர் இல்லமொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து ஊறணி பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்ட்டு தகனக் கிரியைகள் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


0 commentaires :

Post a Comment