1/18/2010
| 0 commentaires |
ஏஜன்சி சிவாஜிலிங்கம் மாலைதீவு சென்று திரும்பினார்
மாலைதீவில் இடம்பெற்ற புலம் பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்வரும் ஜானாதிபதித் தேர்தல் குறித்தும் தமது நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மாலைதீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் இன்று காலை நாடு திரும்பியுள்ளதுடன், தற்போது மலையகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் போது தமது நிலைப்பாட்டிற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதிநிதிகள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் , இது குறித்து விரைவில் சாதகமான அறிக்கை விடுவதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டதாக அவர் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.
அதேவேளை மாலைதீவில் வைத்து விடுதலை புலிகள் அம்மைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் ஏரம்பு சின்னம்மாவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் , அவர் தற்போது சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவது பிள்ளைகளுடன் இணைவார் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment