ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேர்தலுக்குச் சென்றது நாட்டை சரத் பொன்சேகாவிடம் தாரைவார்க்கவல்ல.
தேர்தலில் அமோக வெற்றி பெறுவதற் கேயாகும் என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
கேகாலை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் கூறியதாவது,
முப்பது வருடங்களுக்கு பின் நாடு பெற்றுக் கொண்ட வெற்றியை பாதுகாப்பது தாய்நாட்டை நேசிக்கும் மக்களின் பொறுப்பாகும்.
எதிர்க்கட்சியினர் நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுக்க முனையும் இச்சந்தர் ப்பத்தில் மக்கள் அவர்களை நிராகரித்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும். பொய் வாக்குறுதிகளைத் தோற்கடிக்கும் பொறுப்பு மக்களுடையது.
0 commentaires :
Post a Comment