தென் இலங்கை மக்களிடையில் சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்ட கை ஏட்டின் தமிழாக்கம்
என் அன்பார்ந்த இலங்கை மக்களே முப்பது வருட காலமாக இலங்கையில் நிலைத்திருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து மக்களுக்கு சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இருக்கும் அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் எமது நாட்டில் சர்வாதிகாரம் பெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட எல்லையில்லாத அதிகாரத்தை அவர் தவறான செயலில் ஈடுபடுவதனாலேயாகும் நான் இத்தேர்தலுக்கு போட்டியிட காரணம் நாட்டை ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து பாதுகாத்து ஜனநாயகத்தை மீண்டும் அமுல்படுத்தி ஊழல் அற்ற அரசினை உருவாக்கி அபிவிருத்தியை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்வது எனது இரண்டாம் போர். தற்சமயத்தில் கடமை புரியும் ஜனாதிபதியவர்களுக்கு சவால் விடுவதற்கு இயலுமான அரசியல் தலைமைத்துவம் இன்று எமது நாட்டில் இல்லை. அதற்கு காரணம் போர் வெற்றியின் உரிமை அவர் தானே செய்தாரென கூறிக்கொண்டு பிரபல்யம் பெற்றுள்ளார். போர் வெற்றியின் சொந்த உரிமையாளர் நானே ஆவேன். அவருக்கு சவால்விட இருக்கும் ஒரே நபர் நானே ஆவேன். நான் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன். அதேபோலவே கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நம்பிக்கை வைக்கக்கூடிய பயமில்லாத தலைவனை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். வரலாற்றில் எமது நாடு பல்வேறு எச்சரிக்கைகளுக்கும், யுத்தங்களுக்கும் முகம் கொடுத்துள்ளது. சிங்கள மக்கள் வாழ்ந்த இலங்கையில் பல்வேறு ஆக்கிரமிப்புக்களின் பின் தென் இந்தியாவிலிருந்து வந்த தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் குடியேறி இருப்பது பல காலத்துக்கு முன்பேயாகும். அதன்பின் ஆங்கிலேயரால் மலைநாட்டில் தேயிலைத் தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட தென் இந்திய தொழிலாளர்களுக்குப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் வியாபார ரீதியாக இங்கு வந்த இஸ்லாமிய மக்களும் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இலங்கை சமூகத்தில் ஒரு பங்காளிகள் ஆவார்கள். சிங்களவர்கள் இலங்கையில் மாத்திரமே வாழ்கின்றனர். இலங்கையில் சிங்கள பெளத்தர்கள் 75% ஆவார்கள். ஆகையால் இந்நாடு சிங்கள பெளத்த நாடு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களாகிய சிங்களவர்களுக்கு நிபந்தனை போட உரிமை இல்லை. இந்நாடு ஒன்றிணைந்த நாடாக பெரும்பான்மை சிங்களவர்கள் ஆட்சி புரிய வேண்டும். நான் இதை பயமின்றி உலகத்துக்கு கூறியுள்ளேன். யுத்தம் ஆரம்பத்திலிருந்து பயங்கரவாதத்தை தோல்வியாக்கலாம் என கூறியவர்களில் நானும் ஒருவன். பல இராணுவ தலைவர்கள் இந்த யுத்தத்தை காட்டிக்கொடுத்தார்கள். அரசியல் தலைவர்கள் அடிக்கடி சமாதான ஒப்பந்தங்கள் மூலமாக புலி பயங்கரவாதிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்தது தைரியமுள்ள இராணுவ தலைமை இல்லாததனாலேயே ஆகும்.இந்நாட்டில் யுத்தம் செய்யாத ஒரு ஜனாதிபதி இல்லாமல் இல்லை. எல்லோரும் யுத்தம் செய்தார்கள். ஆனால் வெற்றியடையவில்லை ஏன்? இராணுவ தலைமைத்துவம் பலவீனமானவர்களாகவும் அவர்கள் அரசியல் தலைவர்கள் முன்னில் அணிபணிந்துள்ளதனாலேயாகும். 2002 ஆண்டு சமாதான ஒப்பந்தம் ஆரம்பத்திலிருந்து அது முடியும் வரை அதை எதிர்த்த சிரேஷ்ட இராணுவ அதிகாரி நான் ஆவேன். யாழ்ப்பாண பிரதேசம் பாதுகாப்பு வலயமாக பிரித்துக்கொள்வதற்கும் தீவுகள் எல்லாவற்றையும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எனக்கு இயலுமாக இருந்தது. இல்லாவிடில் பலாலி விமான நிலையமும் அதன் இராணுவ முகாமும் காங்கேசன்துறையும் எமக்கு இல்லாமல் போவதற்கு இடம் இருந்தது. மஹிந்த சிந்தனை நூலில் 28ம் பக்கத்தில் நான்கு பக்கங்கள் முழுவதும் சமாதான பேச்சு வார்த்தைதான். புலிப் பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வதென கூறப்பட்டுள்ளது. நிகழ்கால ஜனாதிபதியவர்களுக்கு யுத்தத்தால் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள தேவை இருக்கவில்லை. அவர் வேறு பயணத்தை எடுத்தார். யுத்தத்தை ஆரம்பிக்க கட்டாயப்படுத்தி அதற்கான சக்தியும் திட்டங்களையும் நானே பெற்றுக்கொடுத்தேன். எனக்குப் பின்னால் இருந்த பெளத்த துறவியர்களுடைய சக்தியும் மக்கள் முன்னணி (ஜே.வி.பி) யினரும் செய்த கட்டாயத்தால் ஜனாதிபதிக்கு தனது விருப்பத்திற்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. வெளிநாடுகள் போலவே தென் இந்திய வற்புறுத்தலுக்கு இணங்க யுத்தத்தை நிறுத்த முயன்றாலும் அச்சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இராணுவ தலைமைத்துவமாகும். தென் இந்திய அரசியல் தலைவர்களை ஒரு சதத்திற்கு கணக்கெடுக்காமல் அவர்கள் நகைச்சுவையாளர்கள் என கூறுவதற்கு முன்வந்தது ஜனாதிபதி ராஜபக்ஷ அல்ல நானேதான். ஆனால் ஜனாதிபதி கருணாநிதியின் மகளாகிய கனிமொழியை இங்கு வரவழைத்து தனது கோழைத்தனத்தை காட்டினார். மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் மக்களை கொல்லாமல் யுத்தம் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவைப்பட்டது. அது சுருட்டையும் தாடியையும் பாதுகாத்துக் கொள்வதாகும். அவர்கள் திட்டமிட்ட “மானுட போர்” ஒரு பதராகி விடுமென நான் அறிந்தேன். ஆகையால் யுத்தம் நடக்கும் போது வெற்றி பெறவேண்டுமாயின் இருபக்கத்திலும் மரணமடைவோரை கவனம் செலுத்த முடியாது. எனவே இராணுவத்தை இரு மடங்காக பலப்படுத்தியதே நான்தான். யுத்தத்தில் பாவிக்கும் ஆயுதங்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு கட்டளையிட்டாலும் தேவைப்படுகின்ற ஆயுதங்கள், குண்டுகள் இறக்குமதி செய்வதற்கும், அவை வரையறையற்று சுடுவதற்கும் கட்டளையிட்டது நானே ஆவேன். மல்டி பெரல், ரொக்கட் லோன்சர்களை அறிமுகமாக்கிக் கொடுத்து விமான குண்டுத் தாக்குதல்களின் பெறுமதியை விளக்கி விமான குண்டுத் தாக்குதல்களை அதிகரிக்க வைத்தது நான். இறுதி நாட்களில் ஜனாதிபதி சர்வதேசத்திற்கு பயந்து புலித்தலைவர்களை உயிருடன் பிடிக்க ஆலோசனை வழங்கினார். பிரபாகரனை பிடித்து அவருடன் பேசவும் அவருக்குத் தேவைப்பட்டது. அப்படியாகிவிட்டால் பிள்ளையான், கருணா அம்மான் போல் பிரபாகரனுக்கும் முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும். சரணடைந்த பிரபாகரனையும் ஏனைய தலைவர்களையும் கொல்ல கட்டளையிட்டது நான் என மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள். இந்த கொடூரமான கொலையாளியுடைய சாவின் உரிமையை ஜனாதிபதிக்கு அல்லது பாதுகாப்புச் செயலாளருக்கு என்னிடமிருந்து பறிக்க முடியவில்லை. வெளி நாடுகளின் தாளத்திற்கு ஜனாதிபதி ஆடினார். ஆனால் ஆயிரக் கணக்கான பயங்கரவாதிகளை இன்னும் முகாம்களில் பாதுகாக்க அரசுக்கு வேண்டியதாக இருக்கும். இப்பிரச்சினை அப்போது நான் எடுத்த தீர்மானத்தால் முடிவடைந்து விட்டது. யுத்தத்தின் பின் ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளர் என்னுடன் கோபமுற்றனர். ஏன்? நீண்டகாலமாக எமது நாட்டில் பாதுகாப்புக்கு தடை ஏற்பட்ட காரணங்களுக்கு நான் சம்மதிக்கவில்லை அவைகள் வருமாறு அகதி முகாம்களிலுள்ள புலிகளை இனங்கண்டு அவர்களை சிறையில் அடைக்க அல்லது கொலை செய்ய வேண்டும் என்ற எனது ஆலோசனை நிராகரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முன் மீளக் குடியேற்றம் செய்ய வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுத்தாலும் அரசியல் செல்வாக்குக்காக அவர்களை மீள்குடியேற்றம் செய்தார்கள்.
ஒளித்து நின்று உதவி வழங்கிய பயங்கரவாதிகளின் பற்றுள்ளவர்கள் இன்னும் வடக்கில் மறைந்து இருப்பதனால் எனது ஆலோசனைகளை முறியடித்து வடபகுதிக்கு ஏ9 பாதை திறந்தார்கள். அதை இதுவரை தாமதப்படுத்தியதே நான் ஆவேன் வட பகுதிக்கு அனுப்பும் பொருட்கள், பசளை, பெட்டரி போன்றவற்றால் குண்டு தயாரிக்க முடியுமென அறிந்த போதிலும் அதற்குள்ள தடைகளை நீக்கி அவை வடபகுதிக்கு அனுப்ப அனுமதி வழங்கியது எனது விதந்துரைத்தலை கவனம் கொள்ளாமையினாலாகும். நான் எவ்வளவு எதிர்த்தாலும் மீன் பிடிப்பதற்கு சட்டங்களை நீக்கி பாதுகாப்புக்கு ஏற்படும் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை.தமிழ் முஸ்லிம் மக்கள் மீன்பிடிப்பதற்குச் செல்லும் கடலில் இராணுவ முகாம்களை அமைக்குமாறு விதந்துரைத்தாலும் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எதிர்வரும் காலத்தில் இவ்வாறாக நாடு பிரிக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கு பாதுகாத்துக்கொள்ளவும் தென் இந்திய இடையூறுகளுக்கு முகம் கொடுக்கவும் இலங்கை இராணுவத்தை 4 இலட்சம் வரை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்தாலும் அற்கு இவர்கள் உடன்படவில்லை.இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பல்வேறு பிரதேசங்களிலும் நகரங்களிலும் இராணுவ கிராமங்கள் உருவாக்க விதந்துரைத்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.வடக்கிலும் கிழக்கிலும் சகல பொலிஸ் நிலையங்கள் அருகில் இராணுவ முகாம்கள் உருவாக்குவதற்கு அவர்கள் உடன்படவில்லை இன பிரிவினைவாதம் இன்னும் முடியவில்லை. ஆகையால் எமது நாட்டில் இராணுவத்தை தயார் செய்திருக்க வேண்டும். சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகளின் இராணுவங்கள் பலமாக இருக்கின்றன. நான் ஜனாதிபதியாகிய உடனே நாட்டு இராணுவத்தை அதிகரித்து எல்லா இளைஞர்களையும் இரு (2) ஆண்டுகள் இராணுவத்தில் சேரவேண்டுமென கட்டாயப்படுத்துவேன். நான் அதில் அடக்கமுள்ள சமூகத்தினரை உருவாக்கவும் அவசர காலத்திற்கு இராணுவத்தை பலப்படுத்தவும் எதிர்பார்க்கிறேன் நாடு முன்னேற வேண்டுமாயின் கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டும்.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்று முன்னேற்றம் அடைந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு காரணம் இராணுவ அதிகாரிகள் ஒரு தடவை அங்கு ஆட்சி புரிந்ததனாலேயாகும். சமுதாயத்தைத் திருத்துவதற்கு நல்ல வழி நாட்டின் சட்டங்களை இராணுவ சட்டமாக உருவாக்கி அவை நன்றாக செயல்படுத்த வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பு என்னுடன் இணைவதையிட்டு பிழையான கருத்துக்கள் கொடுத்து நாட்டை காட்டிக்கொடுக்க முயல்கின்ற பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தன் அவர்கள் முன்வைத்த காரணங்களுக்கு நான் உடன்படவில்லை. அவர் என்னுடன் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை. வடக்கு, கிழக்கை ஒன்றிணைக்கவோ தமிழ் மக்களுக்கு இந்நாட்டுக்குள் பிரிக்கப்பட்ட சுய நிர்வாகம் பெற்றுக் கொடுத்து நாடு பிரிப்பதற்கு நான் எப்போதும் உடன்படவில்லை. அதற்கு நான் இடமளிக்க மாட்டேன் யுத்தம் வெற்றியடைவதற்கு 27.000 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுடைய உயிரைப் பறிகொடுத்து 50.000 இற்கும் அதிகமானோரை அங்கவீனர்களாக்கி ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்று பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை எப்போதும் திருப்பிவிடுவதற்கு இடமளித்து விடக்கூடாது. நாம் கொண்டுசென்ற போரை நிறுத்தாமல் எதிர்காலத்தில் அதை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதை முகாமைத்துவம் செய்ய வேண்டும். அது எனது இரண்டாவது போராகும். சுதந்திர, அடிமையற்ற, சுபீட்சமான பிரியாத இலங்கையை உருவாக்குவதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே நீங்கள் அனைவரும் எனக்கு வாக்களிப்பீர்களென எதிர்பார்க்கிறேன் இப்படிக்கு நம்பிக்கையுள்ள-
சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளர்
0 commentaires :
Post a Comment