1/18/2010

கல்முனை மாநகரசபை தமிழ் கூட்டமைப்பு இரு உறுப்பினர்கள் ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு


கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்களான காத்தமுத்து கணேஸ் மற்றும் வடிவேல் கோபாலபிள்ளை ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை ஆதரிப்பதற்கு முடிவெடுத் துள்ளனர்.

நேற்று நடைபெற்ற பத்திரிகை யாளர் மகாநாட்டுக்கு வருகை தந்தி ருந்த இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பிழைப்பானது என்றும் அது தமிழ் மக்களுடனோ, தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்தவர்களுடனோ கலந்தாலோசிக்கப்படாமல் எடுக்கப்பட்டமையினால் தமிழ் மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்

0 commentaires :

Post a Comment