ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெறுவது உறுதி என்றும் எதிர்வரும் 27ம் திகதி இந்த நாட்டிலுள்ள சகல இன மக்களும் பாற் சோறு, பலகாரங்களை செய்து இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை எதிர் அணி ஆதரவாளர்களுக்கு எந்தவித பாதிப்புக்கள் ஏற்படுத்தாத வகையிலும் வன்முறைகளை ஏற்படுத்தாத வகையி லும் முன்னெடுக் குமாறு அவர் சகல ரையும் கேட்டுக் கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர்களான அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச எம்.பி. ஆகியோர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றிக்காக இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாங்கள் எதிர்பார்ப்பதைவிட பாரிய ஒத்துழைப்புக் களை வழங்கியுள்ளதுடன் வாக்குகளை வழங்கவும் தயாராகவுள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்கள் நடத்திய சகல கருத்துக் கணிப்புகளிலும் ஜனாதிபதி முன்னணியில் இருக்கின்றார். ரணில் - சரத் பொன்சேகா - சம்பந்தன் ஒப்பந்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெறும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் தற்பொழுது காணப்படுகின்ற சமாதானத்தை மீண்டும் பலிகொடுக்க எந்த இன மக்களும் தயாராக இல்லை. ஈழ நீதிமன்றத்திற்கு ஈழப் பொலிசுக்கு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்ட விரோத வரிக்கு, பிள்ளைகளை பலாத்காரமாக பிடித்து, ஆயுதப் பயிற்சி வழங்கி, சிறு வர் படைக்கு சேர்க்கும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வடக்கு, கிழக்கு மக்களும் இந்நாட்டில் மீண்டும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை. எனவே 70 வீதமான மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டனர் என்றார். தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறும் நடவடிக்கைகளும், பாரிய வன்முறைகளும் இந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெறுகின்றது என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்க எதிர்க்கட்சிகள் முனைகின்றனர். ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதி என்பதை தெரிந்தே எதிர்க்கட்சிகள் இது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். எனவே, 2005ம் ஆண்டு தேர்தலை அமை தியாக நடத்த முடிந்தது போன்று இந்த தேர்தலையும் அமைதியாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரினார். பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட போது இந்த நாட்டு மக்கள் ஜாதி, மத பேதங்களுக்கு அப்பால் கொண்டாடியது போன்று 27ம் திகதி ஜனாதிபதியின் அமோக வெற்றியையும் அமைதியாகவும், சந்தோஷத்துடனும் கொண்டாடுமாறும் தெரிவித்தார். |
1/23/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment