எஸ் .எம்.எம்.பஷீர்
அரசியலில் தன்னை சமூகத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தக்க வைக்கின்ற செயற்பாடு என்பது அரசியலில் பொதுவானது ஆனால் சிறுபான்மை சமூகங்களின் அரசியலில் தன்னை தமது கட்சியை தக்க வைக்கின்ற செயற்பாடு சிலவேளைகளில் சமூகத்திற்கு பல தீமைகளும் இழைத்துவிடுகிறது. அந்த வகையில் தான் அரசியல் சில இன அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்கள் , கட்சிகள் என்பன செயற்படுகின்றன. அதற்கான காலச் சூழல்கள் "இனப்பிரச்சினை" தொடர்பான போராட்டங்களுடன் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இன ரீதியான அரசியல் அமைப்புக்கள் இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் மிக ஆழமாக புரையோடி போயிருக்கும் அச்ச உணர்வின் மீது தமது தளத்தினை கட்டமைத்து , போஷித்து வருகிறது. இவ்வாறான சூழலில் சக சிறுபான்மை இனத்துடனான அரசியல் கூட்டுக்களும் பல சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பவாதக் கூட்டாகவே அமைகின்றன என்பதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய முஸ்லிம்காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் அவரது முன்னாள் தலைவர் போலல்லாது போதிய எச்சரிக்கை எடுக்காமல் சகட்டு மேனிக்கு தான் செயற்படுவதாகக் காட்டிக்கொண்டு பல பிழையான முடிவுகளை தான் கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆயுத காலத் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கு ஆதரவளிக்கும் ஒப்பீட்டு ரீதியில் அவரை விடவும் கல்வி கேள்விகளில் குறைந்த பலரின் ஒத்தாசையுடன் எடுத்து வந்திருக்கிறார் , எடுத்தும் வருகிறார். மறு புறத்தில் புலிகளின் புலம் பெயர் சக்திகளின் செல்வாக்கும் மேனாட்டு சக்திகளின் வழிநடத்தல்களுக்கும் இணங்கவும் செயற்பட்டு வந்திருகிர்ரர், வருகிறார். இவர் பிரபாகரனை சந்தித்ததும அவ்வாறுதான் நிகழ்ந்தது. மிகவும் இன்முகத்துடன் எங்களை வரவேற்ற ஒருவராக மிகவும் சிநேகமான புரிந்துணர்வுடன் , திறந்த மனதுடன் கதைக்கின்ற ஒருவராக அவரை நாங்கள் பார்த்தோம்; எதிர்பார்த்ததைவிடவும் எந்தக்கடினப்போக்குமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஒரு நெருங்கிய நட்பை ஏட்படுத்திக்கொள்ள வேண்டுமென்கின்ற வாஞ்ஞையுடன் இருப்பதாக அவரை நான் பார்த்தேன்; எதிர்பார்த்ததைவிடவும் இந்தச்சந்திப்பு எங்களுக்கிடையே இருக்கின்ற சந்தேகங்களை களைய உதவியிருக்கிறது." இதுதான் முஸ்லிம்களை வேரறுத்த இன சம்ஹாரம் செய்த பிரபாகரனைப் பற்றி அவரை சந்தித்தபிறகு ஹகீம் முன்வைத்த அபிபிராயம். இப்படிச்சொல்லி மாதங்கள் கடக்கவில்லை மூதூரும் வாழைச்சேனையும் புலிகளின் வன்முறையில் முஸ்லிகளை சமாதானத்தின் பெயரால் பலிபீடத்திற்கு அனுப்பியது. மூதூரியில் நடந்த கலவரத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது புலிகள் சமாதானத்துக்கான விலையை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபின்னர், ரணில் என்காலடிக்கு வரவேண்டும் , தனது கோரிக்கை நிறைவேற்றவேண்டும் என்று ஹக்கீம் அன்று அரசியல் அடம்பிடித்தும் ரணில் "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் " கதையாய் இவருக்கு அசையவில்லை; இப்போது பொன்சேகா புராணம் பாடுகிறார், மூதூரில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான உடனேயே முஸ்லிகள் மீது தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை புலிகள் விஸ்தரித்தபோது ஹககீம் தனது நோர்வே அரசின் தரகு முதலாளியாக விசுவாசத்துடன் செயற்பட்டு அன்று அங்கு ஏற்பட்ட இன முறுகலுக்கு சமாதானத்தை விரும்பாத, சமாதானத்துக்கு எதிரான முஸ்லிம் சக்திகளும் காராணம் என்றுஅறிக்கையிட புலிகளின் தமிழ் நெட் இணையம் ஆஹா இதுவல்ல செய்தி என்று ஆர்ப்பரித்ததும் இன்னும் பதிவில் இருக்கிறது. அரசியல்வாதிகள் கட்சி மாறுவது என்பது மிகச்சாதாரணமான நிகழ்வு என்பது ஒருபுறம் இருக்க எதிரும் புதிருமான கொள்கை கொண்ட கட்சிகள் பல ஒரு நேர்கோட்டில் பயணிப்பது என்பது சாத்தியமானதல்ல என்பதை இப்போது இலங்கையில் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கின்ற அரசு எதிர்க் கூட்டணியின் முரண் கருத்துக்கள் முளைவிடத்தொடங்கிவிட்டன. இந்தக் கூட்டில் சில பிரிவினர் தமது வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள முற்படுகின்ற அடிப்படையில் மட்டுமே இணைந்திருக்கிறார்கள், இந்த சூழ்நிலையில்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது கட்சி முடிவு குறித்து தடுமாறி புலிகளின் காலாவதியான பகிஸ்கரிப்பு முடிவை மீளப் புதுப்பித்து அற்க்கையிட்டு சில தினங்களுக்குள் அவரின் கட்சி ‘யு டேன்" எடுத்துள்ளது. அகில இலங்கை தமிழ் காகிரசின் பேச்சாளர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி இலங்கையில் நாடாளுமன்ற மனித உரிமை சட்டத்தரணியாக பணிபுரிந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறை மீட்கும் பணியில் பெருமளவில் ஈடுபட்டவர். பிரித்தானிய அரசுக்கு அதன் நீதித்துறைக்கு புகலிடம் கோரும் தமிழர்களுக்கு இலங்கை அரசை மிலேச்சத்தனமான அரசாகக் காட்டி, அவ்வரசின் நாடாளுமன்ற அங்கத்தவர் என்ற ஊதியத்துடனும் , பாதுகாப்புடனும் , புலிகளின் மனித உரிமை மீறல்களை பொறுத்தவரை கபோதியாக இருந்து, ஒரு தலைப்பட்சமாக மனித உரிமையை புரிந்துகொண்டவர். இவர் சில வாரங்களுக்கு முன்னர் தேர்தலை புலிகள் செய்ததுபோல் அதே எதிர்பார்ப்புடன் தமது கட்சி தேர்தலை பகிஸ்கரிக்கும் என தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கப்படுத்தினர். சில தினங்களுக்குள் அவ்வாறு செய்தால் மீண்டும் மஹிந்த வருவதற்கு வழிசமைத்துவிடும் என்று அவர்கள் மீது விடுக்கப்பட்ட புலம் பெயர் அழுத்தங்கள் மூலம் நேரெதிர் முடிவினை எடுத்தவர்கள். இவ்வாறான ஒரு நேர் எதிர திருப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் 1988 ஜனாதிபதித் தேர்தலில் எடுத்தது.
0 commentaires :
Post a Comment