1/08/2010

செல்லச்சாமியின் முடிவு ஜனாதிபதியின் வெற்றியை எவ்வகையிலும் பாதிக்காது

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி எதிரணி வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள் ளார்.

இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதி ல்லை என நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதிய மைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

எதிரணியை அவர் ஆதரிப்பதற்கு இ. தொ. கா.விற்கும் அவருக்கும் இடையே இருந்த முரண்பாடுகளும் காரணமாகும்.

அத்துடன் அவரது மனைவி ஐ. தே. கட்சி உறுப்பினராக இருக்கிறார். அவரைப் பொறுத்த வரையில் எதிரணியை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்க லாம்.

எதிரணிக்கு சென்று ஜனாதிபதியை விமர்சிப்பாரானால் பிரதி அமைச்சர் பதவியை ஏற்காமல் இருந்திருக் கலாம். தற்போதுள்ள நிலை யில் அவர் எதிரணியை ஆதரிப்பதென்பது அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்


0 commentaires :

Post a Comment