டாக்டர் அஹமட் பரீட் மீராலெப்பை வாசிகசாலை இன்று ஏறாவூர் மீராக் கேணியில் திறப்பு.
இன்று தமிழ் முஸ்லிம் சமுகங்கள் ஒரு கோப்பையில் உணவு அருந்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதை இட்டு சந்தோசம் அடைவதாகவும், இதேபோன்று எப்போதும் இரு சமுகமும் ஒற்றுமையாக வாழவேண்டும் என வாழ்த்து.
ஏற்வூர் பற்று பிரதேச சபைக்கான உப காரியாலயம் இன்று ஏறாவூர் ஐயங்கேணியில் திறப்பு - கிழக்கு மதல்வர் பங்கேற்பு
இத்திறப்பு விழாவில் பங்குபற்றி உரை நிகழ்த்திய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ் உப காரியாலயத் திறப்பு எந்த ஒரு அரசியல் நேக்கமும் இன்றி இப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தமது கடமைகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள அதிக தூரம் செல்ல வேண்டி உள்ள பாரிய சுமையை குறைக்கின்ற ஒரு காரியம் என்றும், சமுகங்களின் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்து வைக்கவேண்டும் என்ற ஒரு பொதுவான சமுக சிந்தனையிலேயே இச் செயற்பாடு அமைந்தது என முதல்வர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் ஜீவரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment