1/09/2010

வடபகுதி மக்களின் நலனுக்காக மேலும் இ.போ.ச பஸ்கள்

வட பகுதியில் மீள்குடியேற்றப்படும் மக்களின் நலன்கருதி கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. இதன்படி நேற்று முதல் கிளிநொச்சி பிரதேசத்தில் மேலும் 15 இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு கொழும்பு - யாழ். இடையிலான பஸ் சேவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இ.போ.ச. பிரதி பொதுமுகாமையாளர் லிங்னிஸ் தெரிவித்தார்.

யாழ். பிரதேசத்தில் 89 பஸ்களும் பருத்தித்துறையில் 18 பஸ்களும் காரை நகரில் 15 பஸ்களும் சேவையில் ஈடு படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா டிப்போவுக்கு மேலும் 25 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி இ.போ.ச. உப காரியாலயத்தினூடாக கிளிநொச்சி நகரிலும் அண்மித்த பகுதிகளிலும் இ.போ.ச. பஸ் சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

துணுக்காய் - மல்லாவி, வவுனியா, யாழ்ப்பாணம் - மன்னார் அடங்கலாக சகல பகுதிகளிலும் பஸ் சேவைகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளுக்கு நேரில் சென்று குறைபாடுகளை ஆராய்ந்ததாகக் கூறிய அவர் கிராமப் பகுதிகளுக்கும் பஸ் சேவைகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். விரைவில் முல்லைத்தீவு பகுதியிலும் இ.போ.ச. பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

மீள்குடியேற்ற நடவடிக்கையுடன் இணைந்ததாக பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

வடபகுதி பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்பட்ட தையடுத்து அங்கு மக்கள் சுதந்திரமாக வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட் டுள்ளது.





0 commentaires :

Post a Comment