1/23/2010
| 0 commentaires |
மட்டக்களப்பில் பெருகிவரும் ராஜபக்ச ஆதரவும், அரசியல் அநாதையாகபோகும் மேயர் சிவகீதாவின் பின்னணியும்.
கு.சாமித்தம்பி (மட்டக்களப்பு)
மட்டக்களப்பு மேயர் சிவகீதாவின் கட்சிமாறும் படலம் ஐக்கிய தேசியக் கட்சியில் வந்து நிற்கின்றது. ஐக்கியதேசிய கட்சிக்கு ஆதரவு கோரி நடாத்தப்படுகின்ற அவரது செயற்பாடுகளை மட்டக்களப்பு மாநகர மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மட்டக்களப்பு எங்கும் பெருகிவருகின்ற ஜனாதிபதி ராஜபக்சவுக்கான ஆதரவு அலையையிட்டு மேயர் பெரும் கவலை கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
முதலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளில் இருந்து சி.ல.சு. கட்சிக்கு தாவிய சிவகீதா இப்போது சி.ல.சு.கட்சியில் இருந்து ஐ.தே.கட்சிக்கு தாவி தனது கட்சி மாறும் படலத்தின் இரண்டாம் காண்டத்தை நிறைவேற்றியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இவரது இந்த திடீர் முடிவின் பின்னணியில் அரசியல் நியாயங்கள் இருக்க முடியாது. அவர் கட்சிமாறிய செய்தியை சிறிகோத்தாவில் வெளியிடும் போது அவர் கூறிய விளக்கங்கள் அதனை தெளிவாக வெளிப்படுத்தின. சுயலாப கணக்கு வழக்குகளோடு இடம்பெற்ற கட்சி மாறலையிட்டு மட்டக்களப்பு வாழ் மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளதோடு இவருக்கு வழங்கிவந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டுள்ளனர். பல புத்திஜீவிகள் மேயரது அரசியல் நடவடிக்கையை நகைப்புக்கிடமாகப் பார்க்கும் அளவிற்கு இவர் தள்ளப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் மட்டக்களப்பில் ஐ.தே.கட்சிக்காக உழைத்த இவரது தந்தை சத்தியமூர்த்தி அவர்கள் இறுதியில் அந்தக் கட்சியை விட்டு வெளியேறினார். இனப்பிரச்சனை உக்கிரமடைந்திருந்த காலத்தில் தமிழ் மக்களை ஐ.தே.கட்சி நடாத்தியவிதம் அவரை அந்த முடிவுக்கு தள்ளியது. அந்த பெருமனிதனான தனது தந்தையாரே விட்டு வீசி எறிந்த ஐக்கிய தேசியக் கட்சியை தேடி அடைக்கலம் புகுந்திருக்கிறார் சிவகீதா. அதனூடாக தனது தந்தையாரின் ஆத்மாவுக்கே துரோகம் இ;ழைத்திருக்கின்றார் இந்த பெண்மணி என்று மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.
ஐ.தே.கட்சியை நிராகரித்து வெளியேறிய சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்காகவும் கிழக்கு மாகாண மக்களின் தனித்துவத்துக்காகவும் தனது உயிரையே விலையாகக் கொடுத்தவர். அந்தப் பின்னணியில் இருந்துதான் சிவகீதாவின் அரசியல் வாழ்வு ஆரம்பித்தது. புலிகள் சத்தியமூர்த்தி அவர்களை சுட்டு வீசியது மட்டும் அன்றி, அவரது புதைத்த உடலையும் தோண்டியெடுத்து சின்னாபின்னப்படுத்தினர். அப்போதெல்லாம் கள்ளமௌனம் காத்து கொலைகாறப் பிரபாகரனை தேசியத் தலைவன் என ப+சித்த சம்பந்தனுடனும் இன்று கைகோர்த்து பொன்சேகாவின் பின்னால் அணிசேர்ந்திருக்கிறார் இந்த சிவகீதா என்றால் அதனை மட்டக்களப்ப மட்டக்களப்பு மக்கள் ஏற்றுக்கொள்ளப்பேவதில்லை.
சத்தியமூர்த்தியின் படுகொலையின் பின்னர், அவரது மகளான சிவகீதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்து இவரை அரசியல்வாதியாக்கியது த.ம.வி. புலிகளேயாகும். கிழக்கு மாகாணத்தில் இருந்து பெண் தலைமைத்துவங்களும் பெண்களுக்கான பிரநிதித்துவமும் வளர்த்து எடுக்கப்பட வேண்டும் என்கின்ற த.ம. வி. புலிகளின் கொள்;கை காரணமாக இவருக்கு கட்சிக்குள் முன்னுரிமையும் வாய்ப்புகளும் வளங்கப்பட்டது. த.ம.வி. புலிகளின் வளர்சிக்கட்டத்தில் உயிரையே துச்சமென மதித்துக் களமாடிய எத்தனையோ மூத்த உறுப்பினர்களை விட இவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதினாலேயே இவரால் மட்டக்களப்பு மாநாகர மேயராக முடிந்தது. ஆனால் இவர் இன்று மேயரானதும் ஏறிவிட்ட பின்னர் ஏணியை எட்டி உதைப்பதுபோல் கட்சிமாறுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார். முதலில் த.ம.வி. புலிகளில் இருந்து சி.ல.சு.கட்சிக்கு தாவினார். தாமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கொண்டிருந்த ஐனநாயகம் மீதான பற்றுறுதியும் மாற்றுக்கருத்துக்களை மதிக்கின்ற பக்குவமும் அவரை சுதந்திரமாக கட்சியை விட்டு வெளியேற வாய்ப்பளித்தது. அப்போது அவர் சொன்ன காரணங்கள் கருணா அம்மான் கட்சி மாறிவிட்டு தனக்கும் நெருக்கடி தருகிறார், பாதுகாப்பு நெருக்கடி என்பதால் தன்னால் ஏதும் செய்யமுடியவில்லை என்பதேயாகும். அப்படியே அது உண்மையாக இருந்துவிட்டுப் போனாலும் இப்போது சி.ல.சு.கட்சியில் இருந்து யு.என்.பிக்கு மாறுவதற்கு அவருக்கு யார் நெருக்கடி கொடுத்தது. என்கின்ற கேள்விக்கு இவரால் பதிலிறுக்க முடியுமா? பி.பி.சி. பேட்டியில் சிவகீதா தனது கட்சித் தாவலுக்கு சொன்ன காரணம் சிறுபிள்ளைத்தனமானது. மக்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்காக பொன்சேகா ஐனாதிபதியாகப் போகிறாராம். அதற்காக இவர் பொன்சேகாவை ஆதரிக்கின்றாராம். பொன்சேகவிற்கே ஒரு பொருளாதாரத்திட்டம் கிடையாது. யு..என்.பி.யின் வலதுசாரி ஏகாதிபத்திய விசுவாச திறந்த பொருளாதாரக் கொள்கைதான் தனது கொள்கையென வாக்குமூலம் அளித்தவர் பொன்சேகா. இந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் அல்ல பசியால் வாடும் ஏழைகளின் எண்ணிக்கையே கூடும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கமும், அதனது ஆட்சிக்காலங்களும் இலங்கை மக்களின் சுய பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். தேசிய பொருளாதாரத்திற்கும், விவசாயிகளின் மேமம்பாட்டுக்கும் சி.ல.சு.கட்சி ஆற்றிவரும் பங்களிப்புகளுக்கு மகிந்த சிந்தனை வேலைத்திட்டங்களே நிகழ்கால சாட்சியமாகும். மகிந்த சிந்தனையின் ஊடாக ஆயிரக்காணக்கான குளங்களும், வாய்க்கால்களும், நீர்த்தேக்கங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதை சிவகீதா அறியமாட்டாரா? இவரது வாயாலேயே மகிந்த சிந்தனை, மகிந்த சிந்தனை என்று எத்தனை ஆயிரம் தடவை உச்சாடனம் பண்ணியிருப்பார். அப்படியென்றால் இதுவரை காலமும் இவர் பேசியதெல்லாம் இவரது போலி அரசியலில் ஒரு படலம்தானா? இப்போது பொருளாதரத்தில் மட்டும் அல்ல அரசியலில் அரிச்சுவடியே அறியாத பொன்சேகாவை வைத்துக்கொண்டு தனிநபர் வருமானத்தை இவர் கூட்டப்பேகின்றாராம். தனது சொந்தவருமானத்தை வேண்டுமென்றால் உயர்த்திக்கொள்ள பொன்சேகா மேயருக்கு வழிவகுத்திருக்கலாம். மேயர் சிவகீதா நினைத்தபோதெல்லாம் இவரின் பின்னால் நடைபயில மட்டக்களப்பு மாநகர மக்கள் மடையர்கள் அல்ல என்பதை இன்னும் சிலநாட்களில் மகிந்தவின் வெற்றி அறிவிக்கும். அப்போது அரசியல் அனாதையாக சிவகீதா ஓரங்கட்டப்பட்டிருப்பார்.
0 commentaires :
Post a Comment