1/07/2010

ஜனாதிபதி மீண்டும் தெரிவாவதன் மூலமே இலங்கை - லிபிய உறவு வலுப்பெறும் லிபிய தூதுக்குழு தெரிவிப்பு




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவாவதன் மூலமே இலங்கைக்கும் லிபியாவுக்குமிடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என்று லிபியா தெரிவித்து ள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நல் வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொருட்டு லிபிய நாட்டு தூதுக் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

லிபியாவைச் சேர்ந்த உலக இஸ்லாமிய அழைப்பு இயக்கத்தின் பிரதிநிதி அதனான் தலைமையிலான குழு, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலியை நேற்று (06) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது தூதுக்குழு மேலும் தெரிவிக்கையில் பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து இல்லாதொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் இல ங்கையை கட்டியெழுப்புவதற்கு முயன்று வருகின்றார்.

இதற்காகவே லிபியாவுடன் பொருளாதார ரீதியாக பல உடன்படிக் கைகளைச் செய்துள்ளார். லிபியாவின் உதவியுடன் இலங்கையில் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வரு வதாக தெரிவித்தது. இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு தமது முழுமையான ஆதர வையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண் டும் என்று அந்தக் குழு கேட்டுக்கொண்டது.

0 commentaires :

Post a Comment