1/05/2010

வடமுனை பிரதேச மக்களுக்கு த.ம.வி.பு கட்சியினால் நிவாரண பொருட்கள் கையளிப்பு

dsc06161-copyமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வடமுனை பிரதேசத்தில் வசித்துவரும் மக்களுக்கான நிவாரண பொருட்களை த.ம.வி.பு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயகிஷன் தலைமையிலான குழுவினர் வழங்கி வைத்தார்கள். அப்பிரதேசத்திற்கு நேரில் சென்ற த.ம.வி.பு கட்சியின் உறுப்பினர்கள் அங்குள்ள மக்களோடு கலந்துரையாடி அவர்களது தேவைகளை கேட்டறிந்ததோடு அவர்களின் உடனடித் தேவைகளாக இனங்காணப்பட்ட வீதி அபிவிருத்தி விவசாய செய்கைக்கான உள்ளீடுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் நிரந்தர குடியிருப்புக்கள் அமைத்தல் தொடர்பான பிரச்சினைகள் இனங்காணப்பட்டு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு அம்மக்களுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

யுத்தம் முடிவுற்று மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இம்மக்களை நேரில் சென்று பார்வையிட் முதலாவது அரசியல் கட்சி த.ம.வி.பு கட்சி எனபது குறிப்பிடத்தக்கது


0 commentaires :

Post a Comment