1/02/2010

யாழ். பள்ளிவாசல்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு


யாழ்ப்பாணத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள இரு பள்ளிவாசல்களைப் புனரமைப்பதற்கு மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களின் நலன் கருதி மொஹிதீன் மற்றும் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல்களே புனரமைக்கப்படவுள்ளன. மொஹிதீன் பள்ளிவாசலைப் புனரமைக்க 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும், முஹம்மதியா பள்ளிவாசலைப் புனரமைக்க 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




0 commentaires :

Post a Comment