1/05/2010

தனிநபர் வருமானத்தை 6 ஆயிரம் டொலராக அதிகரிப்பதே இலக்கு ‘உரிய முறையில் திட்டங்கள் முன்னெடுப்பு’ - ஜனாதிபதி


கடந்த நான்கு வருட காலத்தில் இலங்கையரின் தனிநபர் வருமானத்தை 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிக ரிக்கச் செய்துள்ளேன். இவ்வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்கு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களுடனான (மருத்துவ மாதுகள்) சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், மருத்துவ மாதுகள் இந்த நாட்டுக்கு சிறந்த சேவை செய்து வருகின்றார்கள். அவர்கள் வீடு, வீடாகச் சென்று தங்களது சேவையை மக்களுக்கு வழங்கி வருகின் றார்கள். இவர்களது சேவையின் பயனாக இந்நாட்டில் தாய் - சேய் மரணம் பெரிதும் குறைந்துள்ளது. இதனையிட்டு அவர்களை நான் கெளரவப்படுத்துகின்றேன். நான் 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரையும் இந்நாட்டினரின் தனிநபர் வருமானம் ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே இருந்தது. ஆயினும் 2005 ஆம் ஆண்டு முதல் பின்வந்த நான்கு வருடங்களிலும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்நாட்டினரின் தனிநபர் வருமானம் 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் தனிநபர் வருமானம் இவ்வாறான அதிகரிப்பைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவையாகும். இருந்தபோதிலும் இந்நாட்டினரின் தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்காகும். இதற்குத் தேவையான சகல வேலைத்திட்டங்களும் இங்கு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப் படுகின்றன. நாட்டு மக்களுக்கு வளமான சுபீட்ச வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனை எனது கடமையாகவும், பொறுப் பாகவும் கருதுகிறேன். நாட்டில் அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை. சமாதானம் இன்றி அபிவிருத்தியும் இல்லை. இதனை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டுதான் பயங் கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையையும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கின்றோம். ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிலப்பகுதியில் அமைக்கப்பட்டு கடலுடன் இணைக்கப்படுகின்றது. இவ்வாறான துறைமுகம் டுபாய் நாட்டுக்கு அடுத்தபடியாக இப்பிராந்தியத்தில் இலங்கையில்தான் இருக்கின்றது. இத்துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியானதும் ஹம்பாந் தோட்டைக்கு அருகில் கடலில் பயணம் செய்யும் பல சரக்குக் கப்பல்கள் இத்துறை முகத்திற்கு வந்து செல்லும். இது இந்நாட்டுக்கே அந்நிய செலாவணியைத் தேடித்தரும். இதேநேரம் கொழும்பு, காலி, ஒலுவில், மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களும் ஒரே நேரத்தில் அபிவிருத்தி செய்யப்படு கின்றன. ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்கள் இந்நாட்டில் முன்னொரு போதுமே அபிவிருத்தி செய்யப்படவில்லை. மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே கெரவெலப்பிட்டி, நுரைச்சோலை, மேல் கொத்மலை மின்னுற்பத்தி திட்டங்களை ஆரம்பித்திரு க்கின்றோம். வீதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டி ருக்கின்றன. நாம் நாட்டினதும் நாட்டு மக்களி னதும் எதிர்கால நலன்களைக் கருத்தில்கொண்டு வேலைத்திட்டங்க ளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் உலக உணவு நெருக்கடி, எண் ணெய் நெருக்கடி என்பவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். எவரும் பட்டினி கிடக்க நாம் இடமளிக்கவில்லை. அரச துறைக ளுக்கு ஆட்சேர்ப்புகளையும் மே ற்கொண்டோம். மக்களுக்கு வழங் கும் நிவாரணங்களையும் தொடர்ந் தும் வழங்கி வருகின்றோம். நான் பதவிக்கு வரும்போது நாட்டின் பொருளாதாரம் சீரழிந்திரு ந்தது. அந்தப் பொருளாதாரத்தை திட்டமிட்ட அடிப்படையிலான வேலைத் திட்டங்களின் ஊடாக மேம்படுத்தி யுள்ளோம் என்றார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல, டாக்டர் ராஜித சேனாரட்ன, எம். பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment