- எஸ் எம் எம். பஷீர்
அலி சாகிர் மௌலானா தான் ஐக்கிய தேசிய கட்சின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படாமல் ரிஸ்வி சின்னலெப்பை நியமிக்கப்பட்டதால் ஆத்திரமுற்று தனது மாமா என அறியப்படும் அளவி மௌலானா ( இன்றைய தென் மாகான கவர்னர் ) மூலம் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். அப்போதுதான் அவர் முதன் முதலில் சுதந்திரக் கட்சியில் 1989 பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் படு தோல்வியுற்றதும் கொழும்பில் வாழ்ந்து வந்தார். 1990 ல் புலிகள் ஏறாவூர் முஸ்லிகள் மீது நடத்திய இனப்படுகொலையின்போது அங்கு மாற்று ஜனநாயக அரசியல் கட்சிகள் யாவும் செயற்படுவது புலிகளால் தடுக்கப்பட்டிருந்த வேலையில் அரசின் தயவிலே –பாதுகாப்பிலே-தான் அங்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் செல்லக்கூடிய நிலைமை காணப்பட்டது , இந்த நிலையில் தான் அலி சாகிர் மௌலானா அன்றைய பாதுகாப்பு அமைச்சருக்கு ஏற்கனவே அறிமுகப்பட்டிருந்தபடியால் அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை ஏறாவூருக்கு செல்ல உடனடியாக அனுமதிக்காமல், அலி சாகிர் மௌலானவை அங்கு அந்த தேவைப்பட்ட நேரத்தில் அனுப்பி முஸ்லிம் காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளை அரசியல் காய் நகர்தல் மூலம் ஒரம் தள்ளி மௌலானாவை செல்வாக்கடைய செய்தார். இது ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டமிட்ட காய் நகர்த்தலாகும். (http://www.srilankaguardian.org/2007/12/diplomacy-of-reward-retribution.html) இதனால் மௌலானா 1989 ம ஏறாவூர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அரசியலில் மீண்டும் புனர் ஜென்மம் எடுத்தார். அன்றிலிருந்து தனது குடும்ப வழிமுறையை, அதன் மீதான கட்டுமானங்களை ஐதீகங்களுடன் கட்டி எழுப்பினார், இதற்கு இவரது குடும்பத்தினர் சகல வழிகளிலும் ஒத்துழைத்தனர். மறுபுறம் முஸ்லிம் சமூகத்தில் சில பகுதியினரால்பேணப்பட்டுவந்த சமய சமூக பிறழ்வுகளும் இதற்கு துணை புரிந்தன. அலி சாகிர் மௌலானா தனது நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த காலத்தில் புலிகளுடன் மென்மை போக்கை கடைபிடித்தார், அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன ஓன்று இவரது மனைவி மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் கிறிஸ்தவ குடுமபத்தை சேர்ந்த பெண்மணி, இவர் கிறிஸ்தவ ஒர்தொடாக்ஸ் எனப்படும் ஆச்சாரமான கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர், இரண்டாவது புலிகளின் ஒத்துழைப்பின்றி அன்று தமிழ் பிரதேசங்களுக்குள் செல்வது வாக்குபெறுவது என்பது கூட புலிகளின் நேரடி அல்லது மறைமுக அனுமதியுடந்தான் முடியும். அலி சாகிர் மௌலானாவின் ஒரு பிரத்தியோக பாதுகாவலர்களில் ஒருவர் 1990 ஆகஸ்ட் மாதம் புலிகலின் காத்தான்குடி ஏறாவூர் முஸ்லிம் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான படுகொலைகளின் பின்னர் மௌலானாவுடன் செயற்பட ஆரம்பித்த ஏராவூரைச் சேர்ந்த முஸ்லிம் புலி உறுப்பினர்., மௌலானா ஐக்கிய அமெரிக்காவிற்கு தப்பியோடும் வரை அவாது பிரத்தியேக பாதுகாவலராக செயற்பட்டார். இன்னுமொருவர் அவரது பிரத்தியேக பாதுகாவலாரகாக பணியாற்றியவர். மௌலானா என்ற சமயம் சார்ந்த குடும்ப வழிமுறை மூலம் வந்ததால் அதனை அவர் இலகுவில் அரசியலில் சந்தைபபடுத்தமுடிந்தது. மேலும் அவர் தனிப்பட்டவகையில் ஒரு ஊழலற்ற அரசியல் வாதி என அறியப்பட்டதாலும் அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை பற்றி பெரிதாக ஏறாவூர் மக்கள் பொருட்படுத்தப்படவில்லை. ஏறாவூர் மக்களின் அந்த 1990 ஆகஸ்ட் மாத மரணச்சடங்குகளில் கலந்துகொண்ட நிகழ்வே இன்றுவரை அம்மக்களால் நினைவு கூரப்படுவதுடன்; அன்று மௌலானாவுக்கு ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கிகொடுத்த சந்தர்ப்பமே அவருக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை நோக்கி மக்களை நகர்த்த உதவியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரவேசத்தால் இழக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி வாக்கு வங்கிகளை தான் நகர்த்திய அரசியல் காய் மூலம் மீண்டும் ( பரீத் மீரலப்பை தேவநாயகம் ஆகியோரின் ஐக்கிய தேசிய கட்சி ) கணிசமான அளவு உள்வாங்க முடிந்ததது. “சத்தியப்பாதை” இஸ்லாம் மதத்தை பொறுத்தவரை முஸ்லிம்கள் தமது மதத்தை “சத்தியப்பாதை” என்றும சொல்லுவார்கள்; அவ்வாறாயின் ரணில் காட்டிய அரசியல் பாதையை " சத்தியப்பாதை" என்று பகிரங்க விளம்பரம் செய்து சென்ற நாடாளுமன்ற தேர்தலில் (2004) அலி சாகிர் மௌலானா போட்டியிட்டார். ஆனால் சென்ற தேர்தலில் வழக்கமாக அவருக்கு தமிழர் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு திரட்டித்தந்த மட்டக்களப்பு வணிகர் சங்கத்தலைவர் சத்திய மூர்த்தி கூட்டமைப்பினை ஆதரித்ததால் மௌலானா முன்னர் பெற்ற தமிழர் வாக்குகளை பெற முடியவில்லை. எனினும் அவருக்கு தேசியப்பாட்டியலில் எம். பி பதவியினை ஐக்கிய தேசிய கட்சி வழங்கியது. தான் கருணா விடயத்தில் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை தோன்றியதும் இவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலக்குள்ளானார், இன்று ரணில் காட்டியது “சத்தியப்பாதை”யில்லை என்று இவர் இப்போது குற்றம் சாட்டுவதும் இவரது சுயநல அரசியலை புலப்படுத்துகிறது, அரசு புலிகள் சமாதான ஒப்பந்தத்திற்கு பின்னர் புலிகளுடன் உள்ள உறவை இவர் வெளிப்படுத்தியது காணக்கூடியதாகவிருந்தது. இவரது புலி உறவு பற்றி தி சண்டே லீடர் பத்திரிக்கையில் "மைநோரிட்டி பொலிடிக்ஸ்-சிறுபான்மை அரசியல்- (Minority Politics) ஆங்கில பத்தி எழுத்தாளர் ஓமர் கய்யாம் (26th April 1998 ) " ஹிஸ்புல்லா, அலி சாகிர் மௌலானா இரண்டு கால் மிருகத்தினை (புலிகளை) ஆத்திரமூட்டக்கூடாது என்ற கொள்கையை பரிந்துபேசுவது மாத்திரமல்ல திருகோனமலை நஜீப் முஹம்துவும் ஒரு குறைந்த அளவில் செயற்படுவதையே தேர்ந்துள்ளார்." என்று குறிப்பிடிருந்தார். கருணாவுக்கும் புலிகளின் பிரபாகரனின் பிரிவினருக்கும் இடையில் சமரசம் செய்யும் முயற்சிகளை பிஷப் சுவாம்பிள்ளை அவர்கள் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் ரவீந்திரன் மற்றும் தமிழர் தேசிய கூட்டமைப்பினர் சிவில் சமூகமென பல தரப்பட்ட மட்டத்திலும் முயற்சித்தபோதும் , வன்னிக்கு விஜயம் மேற்கொண்டு புலிகளுடன் சமரசம் பேசிய போதும் எதுவும் சரிவராததால், கருணா இலங்கை விட்டு வெளியேறிவிட்டால் நல்லது என்ற அடிப்படையில்தான் ரமேஷ் மௌலானாவை பயன்படுத்தினார். இது பற்றி அன்று சமாதான செயலகத்தின் பிரதி பொதுச்செயலாளர் கேதீஸ் லோகநாதன் ( இவர் புலிகளால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டவர் ) இவர் தனது புனை பெயரான சத்யா என்ற பெயரில் சண்டே டைம்ஸ் (The Sunday Times) பத்திரிகையில் “அலி சாகிர் மௌலான ரணில் விக்ரமசிங்காவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் என்றும் அவ்வாரே அவர் வன்னியை தளமாகக்கொண்ட புலிகளின் தலைமைத்துவத்துடன் அதேயளவு நெருக்கம் கொண்டவர என்றும, அவர் (மௌலானா) தான் மட்டக்களப்பு-அம்பாறை புலிகளின் தலைவர் ரமேஷின் வேண்டுதலின் படியே கருணாவை வெளியேற்றுவதற்கு கருணாவுடன் தொடர்புகளை உண்டாக்கியதாக வெளிப்படையாக தெரிவித்திருகிறார் “என்றும் எழுதிருந்தார். ( “Ali Zahir Moulana , a UNP National List member of Parliament and close confidant of Ranil wickramasinghe, with equally close contacts with the Vanni-based LTTE leadership , revealed publicly that he had established contacts with Karuna at the request of the LTTTE Batti-amparai leader Ramesh in order to escort Karuna and his comrades to Colombo as part of a deal aimed at offering Karuna an exit” –Ketesh Loganathan -Sathya). மௌலானா புலிகளின் மட்டக்களப்பு ரமேஷ் வேண்டிக்கொண்டபடிதான் கருணாவை கொழம்புக்கு கொண்டுவந்ததவர்; அவராக கருனாவை கொண்டுவர தீர்மானிக்கவில்லை . மொத்தத்தில் புலிகளின் கட்டளைப்படியே இவர் அதனை செய்தார். ஆனால் கருணா பின்னர் தொடர்ந்த புலிகளின் நடவடிக்கைகளும் கருணாவின் அதனை எதிர்த்துநிக்கும் (மறைந்திருந்தேனும ) செயற்பாடுகளும் அடிப்படையில் தான் தப்பி வர உதவியதற்காக மௌலானாவுக்கு அவர்கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் பங்குனி மாதம் 2004ல் சுவாம்பிள்ளை குழுவினர் வன்னி சென்று திரும்பியதும் கருணாவுக்கு பிரபாகரன் பொது மன்னிப்பு வழங்கவிருப்பதாக குறிப்பட்டார் ஆனால் கருணா " அர்ப்பணிக்கப்பட்ட உயிர்கள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், ஒருவர் அதனை அர்த்தமுள்ளதாக்குவது என்பது யுத்தத்திலிருந்து விடுபடுவதாகும். நாங்கள் மீண்டும் யுத்தம் செய்வதானால் அதன் அர்த்தம் நாங்கள் மீண்டும் பெறுமதியான உயிர்களை இழக்கப்போகிறோம் என்பதே எனக்கு வாங்கப்படும் பொது மன்னிப்பு என்பது பரிகசியத்திற்குறியது. வடமாகான தலைமத்துவந்தான் எங்களிடம் தாங்கள் எங்களுக்கு இழைத்த வேறுபடுத்துதல் பாரபட்சங்களுக்காக மன்னிப்பு கோரவேண்டும்." என்று கருணா அவருக்கு மன்னிப்பு வழங்கும் பிரபாகரனின் உரிமையை நிராகரித்தார். . தனது அண்மைய பத்திரி்கை நேர்கானனில் இவர் தனது அரசியல் வெற்றிகளை மட்டுமே மிகைப்படுத்துபராக காணப்படுகிறார். திட்டமிட்டே தனது 1989 தேர்தலையும் அதில் அவருக்கு ஏட்பட்ட தோல்வியையும் சவுகரியமாக மறைத்துவிட்டார். பல விடயங்கள் மிகைபடுத்தப்பட்டிருகின்றன. கருணாவை கொழும்புக்கு கொண்டுவந்த பின்னர் மௌலானா எனக்குத்தெரிந்த முஸ்லிம் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டு முஸ்லிகளை சந்திக்கும் ஏற்பாடுகளை செய்ய முற்பட்டார், அந்த பத்திரிகையாளர் இப்போது ஐக்கிய ராச்சியத்தில் அகதி அந்தஸ்து பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவ்வாறு மேலும் சிலரையும் சந்திக்க வைக்க மௌலானா கூறியதாகவும் இந்த பத்திரிகையாளர் கூறினார். ஆனால் இம்முயற்சிகள் பெரிதும் வெற்றியளிக்கவில்லை. என்னிடம் இக்கட்டுரையின் முதல் பாகத்தின் பின்னர் என்னிடம் தொடர்புகொண்ட மௌலானாவுக்கு மிகவும் நெருக்கமானவர் அறிமுகமான தனது பத்திரிகை பேட்டியில் தன்னை ரமேஷ் சந்தித்தது பற்றி குறிப்பிடாமல் விட்டதனை குறை கண்டு விமர்சித்தார்; இவர் அமெரிக்காவிற்கு ஓடியபின்னர் அங்கிருந்து சென்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்க்ரமசிங்க்ஹா விற்கு ஆதரவாக ஒலிஒளி பதிவு மூலம் ஏறாவூர் மக்களுக்கு ரணில் விக்க்ரமசிங்காவிட்கு ஆதரவளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இச்செய்தியில் அவர் வன்னியிலிருந்தும ,கிழக்கிலிருந்தும் அவரது உதவியை புலிகள் வேண்டிக்கொண்டதை கூறியுள்ளார்.ஆனால் இப்போது தனது நேர்காணல்களில் பத்திரிகை அறிக்கைகளில் புலிகளின் தொடர்புகள் பற்றி திட்டமிட்டு மறைத்து வருகிறார். “1990களில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான சமாதான பேச்சு ஆரம்பமானது. அரச தரப்பில் பிரதான சமாதான தூதுவராக அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் காலக் கட்டத்தில் கேர்ணல் கருணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது எம்.பியாக இருக்கவில்லை. கருணா அம்மானுடன் கரிகாலனையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவராக இருந்த அர்ஜுன அலுவிகாரே ஆகியோருடன் புலிகளைச் சந்தித்தோம். கிழக்கு பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். கருணா உடனடியாக அதற்கு செவிமடுத்தார். புலித் தலைமையின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு வந்தார். மட்டக்களப்பு விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் தப்பபிப்பிராயங்கள் களையப்படுவது குறித்தும் பேசினோம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக புலிகளால் நியமிக்கப்படுகின்ற முஸ்லிம் ஏஜென்டுகள் தரமானவர்கள் அல்ல. தகுதி வாய்ந்தவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை ஏ. சி. எஸ். ஹமீத் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். உடனடியாக குறிப்பிட்ட நபர்களை நீக்கவும் தகுதியானவர்களையும் கனம் பண்ணத் தெரிந்தவர்களையும் நியமித்தார். “ (. தினகரன் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை) இவர் கருணா மற்றும் கரிகாலனுடன் சந்திப்புக்களை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார் . மேலும் கருணாவை கொண்டு முஸ்லிம் புலிகளின் நிர்வாகங்களை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் புலிகளால் ஓட்டமாவடியில் ஜூலை மாதம் 1990 ஆண்டு கொல்லப்பட்ட பத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள், அதே காலகட்டத்தில் ஏறாவூரில் புலிகளால் கடத்தப்பட்ட ஏறாவூரின் கொத்தணி அதிபர் தாவூத், மௌலானாவின் நெருங்கிய நண்பரின் தந்தையான அலி முகமது, அவரது மருமகன் காதியார் கபூர் ஹாஜியார் , ஓட்டமாவடி புஹாரி விதானை போன்ற பிரபலங்களை தனது புலிகளுடனான தொடர்புகள் மூலம் ( குறிப்பாக கருணா மூலம்) விடுவிக்க முடியவில்லை அல்லது முஸ்லிம்கள் பின்னர் ஏறாவூரிலும் காத்தான்குடியிலும் கொள்ளப்படாமல் தடுக்கமுடியவில்லை, என்ற கேள்வி இவரது "நேர்காணலை " வாசிக்கும் போது நியாயமாகவே எழுகின்றது. கருனாவைத் தனது பாடசாலைக்காளத்திளிருந்தே தெரியும் என்றும அவருடன் ௧௯௯௦ களில் புரிந்துணர்வை ஏற்படுத்தியதாக கூறும் மௌலானா பலவிதத்தில் புலி -மிருகங்கள்-தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்கள் மீது ௧௯௯௦ களின் பின்னர் மேற்கொண்ட இன அழிப்புக்களை தாக்குதல்களை ,கடத்தல்களை தடுக்கும் முகமாக கருணாவுடன் தொடர்புகொண்டு தாம அவருடன் எட்டிய புரிந்துனர்வுமூலம் ஏதேனும் முயற்சி எடுத்தாரா ? அது போகட்டும் வாழைச்சேனையில் முஸ்லிம்கல் மீது ௨௦௦௨ல் புலிகள் தாக்கியபோது தன்னும் இவர் கருணா மூலம் தடுக்க முட்பட்டாரா ? இன்று சுய வெற்றி புராணம் பாடுவதுடன் இவற்றுக்கெல்லாம் காரணம் ரணில் விக்ரம்சிங்க்ஹா என்று வேறு தி ஐலன்ட் பத்திரிகைக்கு செய்தி விடுகிறார், இது முஸ்லிம்களை பொறுத்தவரை காதில் பூச்சூடுவதல்ல , குல்லாப்போடுவதாகும். இன்னுமொரு முக்கிய சம்பவத்தினை எனது பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன, அதாவது புலிகளை மட்டக்களப்பில் ஏ சி . எஸ் ஹமீத் புலிகளை சந்த்தபின்னர் வாழைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச்சங்க கட்டடத்தில் M.P.C.S) முஸ்லிம்களை சந்தித்தபோது பிரியந்திரசெனை ( வாழைச்சேனை) எனும் பகுதியை சேர்ந்த முகமது காசிம் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளை (உவைஸ் . ஜிப்ரி ) ஆகியோரை புலிகள் ஜனவரி ௧௯௯௦ ல் கடத்தி தடுத்துவைத்திருப்பதை விடுவிக்க உதவுமாறு மகஜர் ஒன்றை 27 மார்ச் 1990 ல் சுமார் மூன்று மணியளவில் கையளித்தபின்னர் , புலிகள் அமைசசர் ஹெலியில் திரும்பிசென்றபின்னர் அமகஜரை கையளித்த அப்பிள்ளைகளின் தந்தையை அன்றைய தினம் சுமார் நான்கு மணிக்கு அமகஜரை கையளித்தமைக்காக அவரையும் புலிகள் கடத்திக்கொண்டு சென்றனர், அப்பிள்ளைகளின் தாய் தனது எஞ்சிய ஐந்து பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அகதியாக தெற்குக்கு இடம்பெயர்ந்தார் என்பதை அமைச்சர் ஹமீதோ அல்லது மௌலனாவோ அறிந்திருக்கமாட்டார்கள். சூரத்தும்மா என்ற தாய் தனது கணவனையும் இரு பிள்ளைகளையும் புலிகளிடம் இழந்து இடம்பெயர்ந்து அவலமுற மறுபுறம் காத்தான்குடியில் அதே காகட்டத்தில் மார்ச் மாதம் ௧௯௯௦ ம ஆண்டு எம். ஆசிய உம்மா , எஸ். கலந்தார் உம்மா, எம். மரியாம்பு , எஸ். அமீனா , எம்.எம்.சாஹிலத் உம்மா , கே. எம். நாகூர் உம்மா ஆகிய தாய்மார்கள் தமது பிள்ளைகளான பாசி அப்துஸ் சலம் , ஹாஜா மொஹிடீன் , பதுர்டீன் , ஜலீல், அப்துஸ் சலாம், முஹமது இக்பால் , சப்ரி ஆகிய இளைஞர்களை புலிகள் கடத்தி கொண்டு சென்றிருந்தனர் , அவர்கள் இது குறித்து ஹமீத் உட்பட அச்ரப் வரை தமது பிள்ளைகளை இவ்வாறு கிழக்கு முழுவதும் முஸ்லிம்கள் ஜிஹாத் , சந்தேக நபர்கள் அரச ஆதரவாளர்கள், மாற்றுக்கட்சிக் காரர்கள் என பரவலாக புலிகளால் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் போனபோது யாருமே ( சகல முஸ்லிம் அரசியல் வாதிகளும் ) ஒன்றும் செய்யமுடியாமல் இருந்த நாட்களில் மௌலானா புலிகளுடன் எத்தகைய தொடர்பை வைத்திருந்தார், அல்லது அவரிருந்த தொடர்புமூலம் என்ன சாதித்தார் என்ற கேள்விகளை சிந்திப்பர்வகளுக்கு மட்டும் உரியவை. சமாதான காலத்தின்போது 2002 ம ஆண்டு தொடக்கத்தில் புலிகள் முஸ்லிகளை மூதூரிலும் வாழைச்சேனையிலும் கொன்றபோது , அவர்களது சொத்துக்களை அழித்தபோது மௌலானா தமது சத்தியப்பாதை காட்டும் தலைவன் ரணில் விக்ரமசிங்காவை கோபிக்கவில்லை, அமெரிக்காவில் இவரது இலங்கை தூதுவராலய நியமனம் குறித்து எப் பி ஐ எனும் அமெரிக்க உளவு துறைக்கு புகார் ஒன்றினை அதன் தலைவர் ராபர்ட் முவல்ளீர் (Robert Mueller) அனுப்பிய அமெரிக்க சட்டத்தரணி புருசே பைன் (Bruce Fein) புலிகளின் முகவர் நிறுவனங்களின் தூண்டுதலால் இப்புகாரினை சமர்ப்பித்திருந்தாலும் இவர் இதன் உள்ளடக்கத்தை எனக்கு அறிமுகமான ஒருவரின் ஈமெயில் தொடர்பில் பிரத்தியோகமாக உறுதிப்படுத்தியதுடன் அதற்கு எதிராக யாரேனும் முன்வந்தால் தான் வழக்கு தொடுப்பதாகவும் சவால் விடுத்திருந்தார். இவரது புகாரில்:- (http://www.srilankaguardian.org/2008/08/minister-suspected-of-conspiracy-and.html) “ஏப்ரல் மாதம் 2004 ம ஆண்டு விசா பெற்று ஐக்கிய அமெரிக்காவுக்கு தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் வந்தார். இவருக்கான விசா வழங்குவதற்கு உத்தரவு அமெரிக்காவிலிருந்து அன்றைய பிரதம மந்திரியான இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் காரனமாகவிருந்ததாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமது புகாரில் இந்நிலையில் இவர் எவ்வாறு அரசுக்கு எதிராக புகலிடம் கோரியது அகதிகள் சட்டத்தின்படி முறைகேடானதாகும் என்றும் மேலும் Honorable Robert Mueller April 3, 2008 The petition has not been withdrawn. An FBI investigation would not confront immunity issues arising under Article 31 of the Vienna Convention on Diplomatic Relations because Mowlana’s status as Minister has not been formally approved by the State Department. In any event, the Secretary of State is authorized under Article 9 of the Convention to order Mr. Mowlana discharged from the Sri Lankan Embassy for flouting United States civil or criminal laws. Investigating Mowlana is essential to insuring respect for the nation’s immigration laws at a time when violations are notorious. Background Mr. Mowlana is neither a stranger to United States immigration laws nor a person of unblemished character. In 1998 or 1999, Mowlana apparently schemed with his wife Thanuja Paiva to consummate a marriage of convenience in the United States with David Fluitt in Santa Clara County, California. Mowlana and his wife coveted a green card for her to secure permanent residency in the United States. While purporting to marry Fluitt, Thanjua Paiva lived with Mowlana as his wife. Fluitt was gay. His partner was a Sri Lankan named Gamini Weerasekera. When the latter threatened to expose the marriage fraud to the Immigration and Naturalization Service, Mowlana and his wife fled to Sri Lanka. Gamini travels between Sri Lanka and the United States, and should be available as a witness. Mowlana’s Visitor’s Visa-2004 In April 2004, Mowlana and his family received visitor’s visas to the United States with the intercession of the Prime Minister of Sri Lanka Mahinda Rajapaksa, Foreign Minister Lakshman Kadirgamar, and the Sri Lankan Ambassador in the United States. The prologue to the visas speaks volumes about his subsequent asylum petition. He was in good standing with the Sri Lankan armed forces and police. Both had collaborated with him in protecting Karuna. Mowlana’s claim of a well-founded fear of persecution based on political opinion seems clearly concocted in contravention of 18 U.S.C. 1001. That conclusion is reinforced by the fact that incumbent President and former Prime Minister Mahinda Rajapaksa appointed Mowlana through his Foreign Minister to serve as Minister in the Sri Lankan Embassy in Washington, D.C. in December 2007 or January 2008. Finally, if the allegation of persecution were genuine, Mowlana would not have tarried before filing for asylum after reaching the shores of the United States. President Rajapaksa and Foreign Minister Kadirgamar may have conspired with Mowlana to make a material false statement concerning persecution based on political opinion in his asylum petition to defeat the lawful functions of ICE in violation of 18 U.S.C. 371. The United States Supreme Court endorsed a broad interpretation of section 371 in Haas v. Henkel, 216 U.S. 462 (1909). Mowlana’s Illegal Alien Status Mowlana may also be an illegal alien. His visitor’s visa was issued in April 2004. He filed a petition for asylum a few months after his arrival in the United States. But the asylum petition, simpliciter, did not extend Mowlana’s visitor visa, which expired long ago. Mowlana’s asylum petition has been pending for four years. Tamils for Justice does not know whether ICE suspended deportation of Mowlana pending a final decision on his asylum application. Attorney for Tamils for Justice, Post Office Box 65450, Washington, D.C. 20006 Phone: 703-963-4968, FAX: 202-478-1664; Email: bruce@thelichfieldgroup.com : இவ்வாறு முஸ்லிம் அரசியல் வாதிகளின் பல பல தீர்க்க தரிசனமற்ற தவறுகளுக்கும நேர்மையீனத்திற்கும் சமூகம் பாவமாக பலியாகிப போயிருக்கிறது. இன்னுமொரு உதாரணமாக குறிப்பிடுவதென்றல் இந்திய சமாதனப் படை காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர் கட்சியாக வட -கிழக்குக் மாகாண சபையில் இருந்தபோது சிவில் தொண்டர் படை என வேலையற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு உழைத்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஐ. பி. கே. எப் ( I.P.K.F) பயிற்சிக்கு சேர்த்தபோது, "ஊருக்குக் ஒரு படை வேண்டும் தம்பி" என்று முஸ்லிம் காங்கிரசின் கட்சிப் பத்திரிக்கையில் மகான சபையின் எதிர் கட்சித்தலைவரும் , அன்றைய முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் கவிதை எழுதி மகிழ்ந்தபோது நான் அவரது கருத்துகுறித்து எனது அதிருப்தியை வெளியிட்டபோது, அவரும் ,அபுல் கலாமும் தங்களது " முஸ்லிம் படையணி" கருத்தை நியாயப்படுத்தினார்கள். அந்த அப்பாவி இளைஞர்கள் பின்னர் கொடூரமாக கொல்லப்பட்டுப்போனார்கள், அவர்களில் ஒரு சிலரின் முகங்கள் எனது நினைவுகளில் இன்றும் சோகமாக வியாபித்திருக்கின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகள் , குறிப்பாக கிழக்கில் தம்மை சுயவிமர்சனம் செய்ய வேண்டியதை விட்டு விட்டு சுய புராணம் பாடிக்கொண்டிருகிறார்கள், மக்களை "சாய்ந்தால் சாயுற பக்கம் சாயுற மாடுகளாக" முஸ்லிம் அரசியல்வாதிகள் கணக்கிட்டு அரசியல் செய்யும் வரை மக்கள் தங்களை சிந்திக்கும் அரசியல் பிரக்ஞை கொண்ட மனிதர்கள் -மன்னர்கள்- என்று நிரூபிக்கும் வரை .......!! இவ்வாறான விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். முற்றும் | ||
0 commentaires :
Post a Comment