புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.
12/31/2010
| 0 commentaires |
'விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்"- அலரி மாளிகையில் புத்தக வெளியீடு
புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.
| 0 commentaires |
சிறுமியை தாயாக்கிய குற்றத்தில் ஒருவர் கைது
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த குறித்த சிறுமி செட்டிபாளையத்தில் உள்ள சிறுமியர் இல்லத்தில் இருந்து செட்டிபாளையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த 10ஆம் மாதம் இவர் குழப்படி அதிகம் என்ற காரணத்தினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் தும்பங்கேணியில் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இவருடைய வயிறு பெரிதாக இருப்பது கண்டு வைத்தியரிடம் சோதனை நடத்திய போது இவர் கர்ப்பிணி என்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தோடர்டந்து சிறுமியிடம் விசாரித்த வேளை குறித்த சிறுமியர் இல்லத்துக்கு அருகில் இருந்த தோட்டத்தில் இருந்துவந்த குறித்த நபர் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார
| 0 commentaires |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், டென்மார்க்கில் வாழும் புலன் பெயர்ந்த எலிகளும்
கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கடந்த (21.12.2010)ந் திகதியன்று டென்மார்க் வந்திருந்தார். அவரின் வருகைபற்றி அறிந்திருந்த டென்மார்கில் வாழும் புலன் பெயர் எலிகள் கூட்டமொன்று அவர் (சந்திரகாந்தன்) ஒரு பயங்கரவாதியெனவும் அவரை கைதுசெய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமெனவும் தமது வழமையான நடவடிக்கைகளில் இறங்கினர். அதற்கமைய டென்மார்க்கின் உள்துறை அமைச்சு, வெளியுறவு அமைச்சு போன்ற நிர்வாகத்தினருக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களையும், (E,Mail) மற்றும் (Fax) போன்றவற்றினையும் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அனுப்பிக்கொண்டிருந்தனர். கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரித்தானியாவில் அமைந்துள்ள பிரபலம்வாய்ந்த பல்கலைக்கழகமான ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் விசேட உரைநிகழ்த்துவதற்காக அங்கு கல்விபயிலும் மாணவர்களின் அழைப்பின்பேரில் வருகைதந்தபோது அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை லண்டனில் வசிக்கும் பெருச்சாளிகள் சில மேற்கொண்டமையினால் பல்கலையில் உரையாற்றும் நிகழ்வு இடம்பெறாது நிறுத்தப்பட்டது.
அதே பாணியில் டென்மார்க்கிலும் தங்களது அடாவடித்தனத்தினை அரங்கேற்ற முடியுமென கனவு கண்ட டென்மார்க்கில் வசிக்கும் புலன் பெயர்ந்த எலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் புஸ்வாணமாகியது. முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் அவர்களும், அவருடன் இணைந்து செயற்படும் மனிதநேயவாதிகளும் திட்டமிட்டபடி அவரது விஜயம் திருப்திகரமான முறையில் நிறைவேற்றப்பட்டது.
| 0 commentaires |
கிழக்கில் எங்கும் வெள்ளக் காடு: மூன்று இலட்சம் மக்கள் பாதிப்பு
| 0 commentaires |
வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர், ஆலயகுரு கொலைகள்: அரசு மீது அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி உரிமைகளுக்கான வலையமைப்பின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம்
12/30/2010
| 0 commentaires |
சுதந்திர தெற்கு சூடானை உருவாக்க உதவுவேன் என்கிறார் ஒமர் அல்பஷிர்
| 0 commentaires |
மார்ச்சில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
12/29/2010
| 0 commentaires |
7 பில்லியனை நெருங்கும் உலக சனத்தொகை தாங்குமா பூமி
| 0 commentaires |
இளைஞர் பரிசளிப்பு விழா 2010
| 0 commentaires |
வாகரை குளங்களில் 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் _
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப பொருளாதார அமைச்சின் வழிகாட்டலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெக்டெப் திட்ட த்தினால் இந்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நான்கு குளங்களில் 1 இலட்சத்து 20 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. 6 மாதங்களில் இவற்றை அறுவடை செய்யமுடியுமென மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி அதிகாரி ஜெயரூபன் தெரிவித்தார்
| 0 commentaires |
ஸ்தான்புல் பேச்சுவார்த்தை ஈரான் மேற்குலக முரண்பாடுகளை களையும் ஈரான் உயரதிகாரிகள் டமஸ்கஸில் தெரிவிப்பு
| 0 commentaires |
கடலை ரசித்தபடியே மீண்டும் தமிழகத்துக்கு கப்பல் பயணம்
12/28/2010
| 0 commentaires |
கிரான் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 11 வயது சிறுமி பலி
| 0 commentaires |
இந்திய பாதுகாப்பு செயலர் நேற்று இலங்கை வருகை
12/27/2010
| 0 commentaires |
ஆழிப்பேரலை அனர்த்த ஆறாம் ஆண்டு நினைவு தினம் நிகழ்வு 2010
இதில் பிரதேசத்தின் செயலாளருமான செல்வி.ராகுலநாயகி அவர்களும் மற்றும் கிராமசேகர் உத்தியோகத்தர்களும் பிரதேசத்தின் இராணுவப்பொறுப்பதிகரியும் அத்துடன் சமுர்த்தி உத்தியோத்தர்களும் கிராமத்தின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வு சரியாக பிரதேச செயலாளரின் முதலாவது நினைவுச்சுடர் 9.15மணிக்கு ஏற்றப்பட்டு அத்தோடு பேரலையில் காலம்சென்றவர்களின் உறவினர்களாலும் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தபட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசினரின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தினம் அனுஸ்டிப்பு.
மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தில் உயிர்நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை
மாவட்டத்தின் பிரதான நிகழ்வாகவும் அமைந்த இந் நிகழ்வு நாவலடியிலுள்ள சுனாமி நினைவுத் தூபி அருகில் காலை முதல் நடைபெற்றது.
நாவலடி சுனாமி நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை யாக, திதியுடன் கூடிய நினைவு விசேட பிரார்த்தனை சோதிடர் சிவ ஸ்ரீ சி.சா.ராமதாஸ.; குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இவருடன் சிவஸ்ரீ முரசொலி மாறக் சிவஸ்ரீ குருக்கள், சிவஸ்ரீ விக்கேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீரங்க சர்மா குருக்கள், சிவஸ்ரீ பரமானந்த குருக்கள், சிவஸ்ரீ பகீரத சர்மா குருக்கள், சிவஸ்ரீ தயாபர குருக்கள், சிவஸ்ரீ அனோஜ சர்மா குருக்கள் ஆகியோரும் கிரியைகளை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பில் அதிகமான மக்கள் பலியான நாவலடியில் வருடா வருடம் பிதிர் கடமை நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இவ்வருடமும் மட்டக்களப்பில் உயிரிழந்த, இலங்கையில், உலகத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையுமு; நடைபெற்றது.
இப் பிரார்த்தனையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது இடங்களில் பிதிர்கடமைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் கலந்து கொள்வது வழக்கமாகும்.
இம் முறை இந்நிகழ்வில், மட்டக்களப்பின் பல இடங்களிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொண்டு தமது உறவனர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.
இதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், ஏ.கிருஷ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன், ரி.எம்.வி.பி.கடசியின் செயலாளர் நாயகம் கைலேஸ்வரராஜா ஆகியோரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாவலடியில் மாத்திரம் 925 பேர் சுனாமியில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை மட்டக்களப்பு நகரில் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுனாமிணில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுப்பிரார்த்தனைகள் நடைபெற்றன.
அந்தவகையில், திருச்செந்தூர், டச்பார், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டு.திர மலை மறைமாவட்ட துணை ஆயர் யோசப்பொன்னையா ஆண்டகை, அருட்திரு. யோசப் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை நடத்தினர்.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுனாமி நினைவுப் பிரார்த்தனைகள், மத அனுஸ்டானங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
| 0 commentaires |
ஐவரிகோஸ்ட் நிலைமைகள் மோசமடைவதால் வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படும் சாத்தியம் 14 ஆயிரம் பேர் தப்பியோட்டம்
ஐவரிகோஸ்டில் நிலைமைகள் நாளாந்தம் மோசமடைந்து செல்கின்றன. ஐவரிகோஸ்டின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து இதுவரைக்கும் 14 ஆயிரம் பேர் ஸைபீரியாவுக்குத் தப்பி யோடியுள்ளனர். அரசியல் வன்முறைகளால் இதுவரைக்கும் இருநூறுக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆபிரிக்க நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஜனாதிபதி கபகோ பதவி விலக வேண்டுமென ஐ. நா. செயலாளர் மற்றும் அமெரிக்க வெளிநாட்டமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளையும் கபகோ நிராகரித்துள்ளார். இந்நிலையில் மூன்று ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஐவரிகோஸ்ட் புறப்பட்டுள்ளனர். நவம்பர் 28ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கபகோவும் எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இருவரும் வெற்றிக்கு உரிமைகோரினர். அரசாங்கத்தின் இராணுவம், ஊடகம் உட்பட இன்னும் முக்கியமானவற்றை இரண்டுவேட்பாளர்களும் கட்டுப்படுத்த முனைந்தனர். இதனால் அங்கு பெரும் அரசியல் பிளவுகள் ஏற்பட்டு வன்முறைகள் தலையெடுத்துள்ளன. இத்தனைக்கும் எதிர்க்கட்சி வேட்பாளரின் வெற்றியை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. கபகோ பதவி விலக வேண்டுமென மேற்குலக நாடுகள் கோரியுள்ளன. நாட்டின் மத்திய வங்கியை குவற்றாவுக்கு ஆதரவு வழங்குமாறு ஐ.நா. கோரியுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைகள் களையிழந்தன. மக்கள் அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறவில்லை. நாங்கள் தாக்கப்படாதிருக்க வேண்டுமானால் எங்கள் தலைகளை உயர்த்த வேண்டும். எங்கள் மீது அநியாயமான போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதென்று கபகோவின் மனைவி தெரிவித்தார். இவ்வாறுள்ள நிலையில் குவற்றாவின் ஆதரவாளர்கள் வீடுகளில் இறங்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். நிலைமைகளை சமாளிக்க வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. | |