விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தப்படுவதை நாம் ஒரு போதும் விரும்பமாட்டோம் சமாதானப் பேச்சக்கள் உறுதியுடன் முன்னெடுக்கப்படவேண்டுமானால் அந்த அமைப்பு பலங்கொண்டதாகவே இருக்க வேண்டியது அவசியமாகும். என்று 2004 ம் ஆண்டு யூனில் குறிப்பிட்ட ஹக்கீமுக்க இலங்கை இராணுவம் புலிகளை வென்றதுகூட அல்லது புலிகளை வெல்லப்போவதுகூட விருப்பத்திற்பகுரியதாக இருக்கவில்லை” இன்னொரு புறம் சரத் பொன்சேகாவை பொறுத்தவரை அவர் பிரபாகரனுடன் ரணில் ஒப்பந்தம் பண்ணியதே துரொகத்தனமான செயலென கருத்துரைத்த பொன்சேகாவும், துரொகத்தனம் செய்த ரணிலும் மேற்குலகின் சதிக்கு துணைபோவதாகவும் இலங்கை நாட்டிற்கு துரோகத்தினை புரிவதாகவும் இலங்கையின் பிரபல வைத்திய நிபுணரான நிமல் டி கஸ்தூரியாராச்சி (Dr. Nimal De kasthuriarachi M.B.B.s. Phd ) ஆனால் பென்சேகா தனது நிலைப்பாட்டில் உறுதியாகநின்று தான் துரோகியென்று குறிப்பிட்டவர்களுடனும், பரிகசித்தவர்களுடனும் கூட்டுச் சேர்ந்துள்ளார். ஹக்கீமும் அதனைததான் செய்துள்ளார். மொத்தத்தில் இவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் அண்மையில் அமெரிக்காவில் போர்க்குற்றங்களுக்காக கைது செய்யப்படலாமென்று கருதப்பட்ட பொன்சேகா எவ்வித தடையுமின்றி, தடுப்புமின்றி இலங்கை திரும்பியது ஜனாதிபதித் தேர்தல் குறித்த மேற்கலகின் சந்தர்ப்பவாத அணுகுமுறையினையும் தலையீட்டினையம் உறுதி செய்கின்றது. இவ்வாறே பாலஸ்தீன காசா பிரதேசத்தில் Gaza Stripes உள்ள றாபாவில் ((Rafa) வில் 2002ம் ஆண்டில் 59 பலஸ்தீனியர்களின் வீடுகளை நிர்மூலமாக்கியதனை யத்தக்குற்றமாக பலஸ்தீனிய லண்டன் மனித உரிமை சட்டத்தரணிகள் யுத்தக்குற்றம் புரிந்தமைக்காக ஓய்வுபெற்ற இஸ்ரேலிய ஜெனரல் டெனொண்ங் அள்மொங்கினை அவர்; லண்டன வந்தபொழுது (General Danong Almog ) கைதுசெய்வதற்காக ஸ்கொட்லாண்யாட் பொலிஸார் ((Sotlandyard) பிடிவிறாந்து (Arrest Warrant ) ஒன்றினை பிறப்பித்தனர் ஆயினும் அவர் இலண்டன் ஹீத்துறோ விமானநிலையத்திலிருந்துதான் (Heathrow Airport) இஸ்ரேலிலிருந்து அவர் வந்த தமது நாட்டு எல-அல் விமானத்திற்கு (El-Al flight) மாறாக வேறு ஒரு விமானத்தில் இஸ்ரரேலுக்கு பறப்பட்டு திரும்பிச் சென்றதால் பிடிவிறாந்து வாபஸ்பெறப்பட்டது என்ற சாட்டு சொல்லப்பட்டது. மறுபுறத்தில் அதேகாலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில். பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயரை (Tony Blair) சந்தித்த இஸ்ரேலின் முன்னாள்: பிரதமர் ஏரியல் சரோன் (Aerial Sharon)ரொனி பிளேயர் லண்டனுக்கு அவரை வருமாறு அழைத்தபோது ஏன் என்னைக் கைதுசெய்து கூண்டில் அடைக்கவா என நகைச்சுவையாக குறிப்பிட்டதுடன் ஜெனரல் டெனொண்ங் அள்மொங்கின் விடயத்தை- கைது செய்வதற்கும் ஸ்காட்லாந்து முயற்சிப்பதை – கவனிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னணியில்தான் பிடிவிறாந்தினை தாண்டிச்சென்ற இஸ்ரேலிய ஜெனரலின் வெளியேற்றமும் பார்க்கப்படவேண்டும். பொன்சேகாவைக் கொண்டு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான சதியில் அமெரிக்க முன்னாள ஜனாதிபதியான றொனாள்ட் றீகனின் (Ronald Reagon) வுறாஸ் பெயின் (Bruice Fein)என்னும் பிரபல முன்னாள் சட்டத்தரணி ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட செய்திகளும் கசிந்தன. இந்த வுறூஸ் பெயின் என்னும் சட்டத்தரணி புலிகளின் “படுகொலைகளுக்கு எதிரான தமிழர்களின்” (Tamils Against Genocide) ஸ்தாபனத்தில் சட்ட ஆலோசகராக இலங்கையின் இராணுவத் தளபதியை (சரத் பொன்சேகாவை) கோத்தபாயா ராஜபக்ஸவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலங்கையில் போர்க்குற்றவாளியாக்க தீவிரமாக செயற்பட்டவர். இவரை லண்டனிலுள்ள தமிழர் தகவல் நடுவத்தின் முக்கிய நிர்வாகியான வரதகுமார் என்பவர் அண்மையில் அழைத்து அவரது பணிக்கு ஊக்கமளிக்கும்வகையில் ஆலோசனைக் கூட்டங்களை நடாத்தியிருந்தார். இத்தமிழர் தகவல் நடுவத்தின் சுயநிர்ணய உரிமை, புலி ஆதரவு, உட்கிடையான சிங்கள இனவாதம் என்ற நிகழ்ச்சி நிரலுக்குள் எவ்வாறு இலங்கை சிறுபான்மை அரசியல்வாதிகள் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிக்கிக்கொண்டதுபற்றி எனது மீசைக்காறச் சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம்கள் என்னும் தலைப்பிலான கட்டுரைகளில் முன்னர் குறிப்பிட்டுள்ளேன். இந்த புறூஸ் பெயின்தான் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற தேசியப்பட்டியல் உறுப்பினரான இன்றைய அலிசாகிர் மௌலானாவினை இலங்கை அரசு தமது அமெரிக்க தூதுவராலய உத்தியோகஸ்தராக ((Minister ) நியமித்தமையை அவரது அகதி விண்ணப்பம் முடிவுறாதநிலையில் மேலும் அவரது முன்னைய குடிவரவு முறைகேடுகள்பற்றி விசாரிக்காத நிலையில் அவ்வாறு நியமிக்கப்பட்டதனை ஆட்சேபித்து அமெரிக்க அரசுக்கு முறைப்பாடு ஒன்றினை செய்தவராகும். அதுகுறித்து பிறிதொரு சந்தாப்பத்தில் விரிவாக எழுதலாமென நினைக்கின்றென். ஏனெனில் சிலரின் முகத்திரைகளும் கிழிக்கப்படவேண்டிய அவசிம் சமூகத்தின நலன்களுக்காக தவிர்க்க முடியாததே! சுமார் இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதுவரை புலம்பெயர் குழுவினருடன் அவரின் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள தூதவராலயத்தில் சந்திக்க நேர்ந்தபோது அவர் வடக்கிற்கு அபிவிருத்தி மட்டுமல்ல அவசியம் அது வெறுமனே சில வருடங்களுக்கு மட்டும்தான், யாழ்ப்பாணம் மிக வசதியான இடம் அது அவர்களுக்கு அவசியமல்ல. நாலைந்து வருடங்களுக்கு பின்னரும் அரசியல்தீர்வு குறித்து ஒரு உந்துதல் எற்படுமென்றும் இலங்கைக்கு தேவை நல்லாட்சிதான் என்றும் அதனைக் கொண்டுவருவதற்கு செயற்படவேண்டுமென்றும் அதற்கு நாங்கள் பங்களிக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொண்டார். நான் சுவிஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் மக்களின் மகாநாடு குறித்த பிரித்தானியாவின் மறைவான கரம் இருப்பதாகவும், ஒரு சதிக்கோட்பாடு நிலவுவதாகவும் கேள்வி எழுப்பியபோது சிரித்து மழுப்பி சதிக்கோட்பாடுகள் பல உண்டு என்று சமாளிக்க முற்பட்டார். அவரது கருத்துக்கள் சிலவற்றில் எனது முரண்கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டி நேரிட்டதது பீற்றர் போலிங் (Peter Bowling) என்னும் பிரபல அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளரின் பின்னணியும் இந்த சுவிஸ் மகாநாட்டில் இருப்பதாக இரகசியங்கள் இப்போது கசியவந்துள்ளது. பிரித்தானிய தென்கிழக்காசியாவிற்கான கொள்கை வகுப்பாளர்களை சுமார் 1½ வருடங்களுக்கு முன்னர் லண்டனில் சந்தித்தபோதும் மஹிந்த அரசுக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் கொண்டிருந்தனர். அதற்கு நான் அறிந்த தமிழ் தேசியவாதிகளும் பின்னணியில் இருந்தனர். அடிக்கடி பிரித்தானிய பிரித்தாளுபவர்களுடன் நெருக்கமாக வேலை செய்பவர்கள்இ எனினும் மொத்தத்தில் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தின (Regime Change)மேற்குலகம் அமைக்க முயற்சிக்கின்றது என்பது தெரிந்தது. இன்று அது உள்நாட்டு எதிர் அரசியல் சக்திகள் மூலம் திரட்சி பெற்றுள்ளது என்பதை அங்கு நடைபெறும் ஆச்சரியமான அரசியல் கூட்டுக்கள் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இன்று அது உள்நாட்டு எதிர் அரசியல் சக்திகள் மூலம் திரட்சி பெற்றுள்ளது என்பதை அங்கு நடைபெறும் ஆச்சரியமான அரசியல் கூட்டுக்கள் ஆச்சரியமான நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மேற்குல்கின் நபுஞ்சக தனத்திற்கு உதாரணங்கள் வரலாறு நெடுகிலும் விரவிக்கிடக்கிறதுஇ. இந்த வஞ்சகத்தனமான நவீன காலனித்துவ ஆக்கிரமிப்பு பல்வேறு நாமகரணத்துடன் அரங்கேறிவருகிறது.. ஏகாதிபதியங்கள் தமது எதிரியையும் நன்பனையும் தான் விரும்பியவாறு தமது தேவைக்கேற்றவாறு உருவாக்கிகொள்ளும் அல்லது உருமாற்றிக்கொள்ளும். தொடரும்
0 commentaires :
Post a Comment