12/25/2009

திருநங்கையர் தனிப் பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிறது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்


திருநங்கையர் தனிப் பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிறது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் திருநங்கையர்
பாகிஸ்தானில் திருநங்கையர் தங்களை தனியொரு பாலினமாக அடையாளப் படுத்திக்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருநங்கையருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்ற பாகிஸ்தானின் தலைமை நீதிபதி, அதில் அவர்கள் தங்களை தனிப் பாலினமாக அடையாளப்படுத்தி விபரித்துக்கொள்ளலாம் என்றும், ஆண் அல்லது பெண் என்றுதான் அவர்களை குறிக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்றும் கூறியிருக்கின்றார்.

பாகிஸ்தானில் ஹிஜ்ராக்கள் என்று அழைக்கப்படும் திருநங்கைகள் பெரும்பாலும் பிறப்பில் ஆண்கள். ஆனால் மருத்துவ மற்றும் சமூக காரணங்களுக்காக இளம் வயதில் ஆணுறுப்பை அகற்றும் சிகிச்சையை செய்து கொண்டவர்கள் இவர்கள்.

இந்திய துணைக்கண்டத்தில் ஒப்பீட்டளவில் இவர்களது எண்ணிக்கை அதிகம். முகலாய சாம்ராஜ்ய காலத்தின் கேளிக்கை வழங்குபவர்களின் கலாச்சார வழித்தோன்றல்களாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

பாகிஸ்தானில் உள்ள இவர்களது சமூகத்தில் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அங்கு பொதுவாக வறியவர்களாக, கவனிக்கப்படாமல், கைவிடப்பட்டவர்களாக மற்றும் பாரபட்சத்துக்கு உட்படுத்தப்படுபவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

ஹிஜ்ராக்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆலோசனை கூறியிருக்கிறது.



0 commentaires :

Post a Comment