நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு.
கடந்த சில நாட்களாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இடைவிடாது பெய்து வரும் பெருமழை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
படுவான்கரை பிரதேசத்தில் வயல் நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டள்ளதோடு, தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் பாலங்களும் பெரும் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக மாவடி ஓடைப்பாலம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதால் போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்து இருக்கின்றது.
மேற்படி வெள்ள அபாயத்தினைப் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் அப்பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும்படி அரச அதிபரிடம் மற்றும் செயலாளர்களையும் பணித்துள்ளார். அத்தோடு அனர்த்த நிவாரண அமைச்சுடன் பேசியதன் அடிப்படையில் தற்போது முதற்கட்டமாக தமது இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்து இருக்கின்ற மக்களிற்கான உலர் உணவு வழங்கும்படியும் உரிய அதிகாரிகளிடம் பணித்துள்ளார். குறிப்பாக வெள்ள அனர்த்தத்தினால் முழுமையாகப்பாதிக்கப்பட்ட பிரதேசங்களான சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை, முறக்கொட்டான்சேனை மற்றும் படுவான்கரை பிரதேசங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
0 commentaires :
Post a Comment