நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து அவருக்கு ஆதரவு தேடும் த.ம.வி.பு கட்சியின் பிரச்சாரக்கூட்டம் இன்று வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவாணி கலா மன்ற மைதானத்தில் இடம்பெற்றது. த.ம.வி.பு கட்சியின் உத்தியோக பூர்வ முதலாவது இக்கூட்டத்தில் பெரும் திரளான த.ம.வி.பு கடசியின் ஆதரவாளர்கள் பிரசன்னமாகியிருந்தார்கள். இந்நிகழ்வானது த.ம.வி.பு கட்சியின் முக்கிய ஊறுப்பினர்கள் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.ம.சு கூட்டமைப்பின் கல்குடா தொகுதி முகவராக நியமிக்கப்பட்டிருக்கும் த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மிகப்பிரமாண்டமான முறையில் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இப்பிரச்சார கூட்டத்திற்கு த.ம.வி.பு கடசியின் உயர்மட்ட குழுவில் பெரும்பாலானோர் பிரசன்னமாகியிருந்தார்கள். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள், நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஏன் த.ம.வி.பு கட்சி ஆதரிக்கின்றது என்பது தொடர்பாக விளக்கமான உரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது, நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளே மிகப்பிரதான செல்வாக்கு செலுத்தும் அதன் அடிப்படையில் கிழக்கு மகாண தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் உள்ளார்கள் எமது த.ம.வி.பு கடசியானது நன்கு ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது. அதாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே எமது நாட்டுக்கு சிறந்த தலைவர் எனவும் தமிழ் மக்களாகிய எமது அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியவருமாக அடையாளம் கண்டிருக்கின்றது. அதனடிப்படையிலேயே இன்று எமது கட்சியானது மக்களாகிய உங்களிடம் ஜனாதிபதி வேட்பாளராகிய மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தேடி முன்வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் இன்று ஓர் சாதாரண சூழல் நிலவுகின்றது என்றால் அதற்கு காரணம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, எனவே இனிவருகின்ற காலங்களில் எமது நாட்டிலும், எமது கிழக்கு மாகாணத்தில் நிலையான ஒரு அபிவிருத்தியும் சமாதானமும் நிறைந்து நிற்பதற்கு எமது நாட்டிற்கு சிறந்த ஒரு தலைவர் தேவைப்படகின்றார், அத்தலைவரை தீர்மானிக்கின்ற சக்தி இன்று எமது மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. எனவே இக்கல்குடா தொகுயினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து வாக்காள பெருமக்களும் அதிகூடிய வாக்கினை எமது ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அளிப்பதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் அல்லாது கிழக்கு மாகாணம் உள்ளடங்கலாக எமது நாட்டிலே அதிக பெரும்பான்மை வாக்குகளை அளித்து மகிந்த ராஜபக்ஷ அவர்களையே மீண்டும் ஜனாதிபதியாக்கவேண்டும் எனவும் கெட்டுக்கொண்டார் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, த.ம.வி.பு கடசியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, த.ம.வி.பு கட்யின் உறுப்பினர் ஜனகன், மற்றும் த.ம.வி.பு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயகிஷன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment