நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் சிறுபான்மை யினரைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்து வம் வாய்ந்தது. பயங்கரவாதம் தலைவிரித்தாடிய கால த்தில் ஏனையோர் சிறுபான்மையினரைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை இருந்ததென்பது கசப்பானதெ னினும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. இன்று அந்த நிலை இல்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது.
முன்னர் நடைபெற்ற தேர்தல் காலங்களில் பயங்கரவாதத் தைத் தோற்கடிப்பது பிரதான நோக்கமாக இருந்தது. இப் போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த தேர்த லின் போது இதையே தனது பிரதான வாக்குறுதியாக முன்வைத்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
இப்போதைய தேர்தலில் அபிவிருத்தியும் சமாதானமும் பிர தான இலக்குகள். இந்த இலக்குகளுடன் சிறுபான்மையின ரின் உரிமைகள் சம்பந்தப்பட்டுள்ளன. சிறுபான்மையின ரின் இனத்துவ உரிமைகளும் அவர்கள் வாழும் பிரதே சத்தின் அபிவிருத்தியும் தேசிய மட்டத்திலான வேலைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டியவையாக உள்ளன. இது சாத்தியமாவதற்குச் சாதகமானவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியம். இவ்விடயத் தில் சிறுபான்மையின வாக்காளர்கள் மிக நிதானமாக நட ந்துகொள்ள வேண்டும்.
இலங்கை ஒரு பல்லின நாடு என்பதையும் சிறுபான்மையி னர் இலங்கையின் சட்டபூர்வமான பிரசைகள் என்பதை யும் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகி க்கும் பட்சத்திலேயே சிறுபான்மை மக்களின் நலன்களு க்கு உத்தரவாதம் உண்டு. இலங்கை சிங்கள நாடு என்றும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களின் விருந்தாளி கள் என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்களின் நிர் வாகத்தில் சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி நினைத்துப்பார்க்கவும் முடியாது.
இலங்கையின் குடிசன அமைவின் அடிப்படையில் சிங்கள வர் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற் கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே சிறுபான்மையி னர் சிங்களவரான ஜனாதிபதி மூலமே தங்கள் நலன்களை உறுதிப்படுத்துவதோடு உரிமைகளையும் பெற முடியும். இதற்குப் பொருத்தமான வேட்பாளர் யார் என்பதைத் தீர் மானிப்பது சிரமமான காரியமல்ல. தேர்தல் காலத்தில் வேட் பாளர்கள் வழங்கும் வாக்குறுதிகள் மாத்திரமன்றி அவர்க ளின் தனிப்பட்ட குணாம்சம் மற்றும் கடந்த கால செயற் பாடுகள் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
சிறுபான்மையினரின் கலாசார விழுமியங்களுக்கும் மொழிக் கும் எப்போதும் மதிப்பளிப்பவராக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இருப்பது நாடறிந்த விடயம். அவரின் செயற் பாடுகளும் எல்லோரும் அறிந்தவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் இன்றைய அரசாங்கம் காட்டுகின்ற சிரத்தை ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு ஓர் உதாரணம்.
இந்தப் பின்னணிக்கூடாகவே சிறுபான்மையின வாக்காளர் கள் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் நோக்கிச் சிறுபான்மையினருக்கு நட்பானவரான வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
0 commentaires :
Post a Comment