12/27/2009
| 0 commentaires |
வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவ ரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்தி லிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:- முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம். முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.< நான் கடந்த தேர்தலில் கூறியவைகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறேன். நீங்கள் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்aர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் நன்கறி வேன். அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகளோடு ஒப்ப ந்தம் செய்தார். அதன் பின்பு, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விருப்பத்துடன் தான் வெளி யேறினரென்று ஹக்கீமும் அவரது சகபாடி களும் கூறினர். அதன்பின்பு உங்களைப் பற்றி அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் இப்போது உங்கள் மத்தியில் பேச வருகிறார்கள். இவர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும். < ப்படியானவர்கள்தான் இரு இனங்க ளையும் பிளவுபடுத்த முயன்றனர். அது பலிக்கவில்லை. முஸ்லிம்களின் நிம்மதியைக் கெடுத்து அகதிகளாக்கியவர்களை நீங்கள் ஒருபோதும் நம்பவேண்டாம். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட உங் களது கஷ்டங்களை நான் நன்கறிவேன். அதனால்தான் ஐக்கிய நாடுகள் வரை சென்று பேசினேன். அதேநேரம், மஹிந்த சிந்தனையிலும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப் பிட்டிருக்கிறோம். ஆகவே, தேர்தல் காலங்களில் வந்து பொய் கூறுபவர்களை நம்பாதீர்கள். பொய்களுக்கு என்றுமே அடிபணிந்து விடாதீர்கள். என்றுமே நான் உங்கள் நண்பன். இந்த நட்பு என்றும் தொடரும். என்னை முழுமையாக நம்புங்கள் என்றார் ஜனாதிபதி. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு முஸ்லிம் மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு செயல்வீரன் ரிஷாட். அவரது பணிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். மார் 3 இலட்சம் தமிழ் மக்களை மிக கண்ணியமாக நடாத்தி அம்மக்களின் தேவைகள் அனைத்தையும் பூரணமாக நிறைவேற்றிக் கொடுத்தவர் அமைச்சர் ரிஷாட். இதனால் எனக்கும் எனது அரசுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் அவரது மக்களின் முன்னிலையிலேயே நன்றி தெரிவிக்கிறேன். மிக இளவயதில் அமைச்சராக உயர்ந்து இன்று வடமாகாண முஸ்லிம்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். எனது அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருப்பது ஒரு சிறப்பான விடயமாகும் என்றும் கூறினார். சந்திரசேன, சம்பிக்க ரணவக்க பிரதியமைச்சர்களான கே.ஏ.பாயிஸ், நிஜாமுதீன், மாகாண அமைச்சர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஆளுனர் அலவி, எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
0 commentaires :
Post a Comment