12/06/2009

கூட்டமைப்பு சரியான முடிவை எடுக்க வேண்டும்

நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக் களின் வாக்குகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த முக்கியத்துவம் ஏதோவொரு வேட்பாளரை வெல்ல வைக்க வேண்டும் என்பதனாலல்ல. இனப் பிரச்சினையின் தீர்வை நோக்கிய ஆரோக்கியமான நகர்வை ஆரம்பிப்பதற்கு இத் தேர்தலைத் தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதனாலேயே அவர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறு கின்றன. தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் இதுவரையில் எந்த முடி வும் எடுக்காதிருப்பது கவலைக்குரியது. அரசாங்க தரப்பிலிரு ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குப் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னரே ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகக் கூட்டமைப்பு வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் வேறு விதமாகப் பேசி யிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தும் என்றும் அப்படி நிறு த்தாவிட்டால் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுவார் என்றும் கூறியிருக்கின்றார். சிவாஜிலிங்கம் எப்போதும் தனி நாட்டு நிலைப்பாட்டில் நின்றே பேசியவர். தனிநாட்டுக் கோஷம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய அழிவுகளையும் அவலங்க ளையும் இன்னும் அவர் உணரவில்லை. எவ்வாறாயினும், சிவாஜிலிங்கம் தனியாக ஒரு ஊடகவியலாளர் மகாநாட்டைக் கூட்டி மேற்படி கருத்தைத் தெரிவித்ததன் நோக்கம் தெளிவா னது. இவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்குத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்காகவே சிவாஜிலிங்கம் இந்த ஊடகவியலாளர் மகாநாட்டைக் கூட்டி யிருக்கின்றார். கூட்டமைப்புத் தலைவர்கள் இதைப் புரிந்து கொண்டு தாமதமின்றிச் சரியான முடிவை எடுப்பார்களென நம்புகின்றோம் இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் இன்றைய யதார்த்தம் என்ன என்பது பற்றிய தெளிவு ஏற்பட வேண்டி யது அவசியம். தனிநாடு சாத்தியமில்லை என்பதும் ஆயுதப் போராட்டம் அழிவுகரமானது என்பதும் நிரூபணமாகியுள்ளன. முழுமையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய சுயாட்சி அமைப் புக்கான சூழ்நிலையும் இப்போது இல்லை. இன்றைய நிலை யில் பதின்மூன்றாவது திருத்தத்துடனேயே அரசியல் தீர்வு முய ற்சி ஆரம்பமாக வேண்டியுள்ளது. பதின்மூன்றாவது திருத்தத் துக்கு மேலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வுடன் தீர்வு முயற்சியை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவது சிரமமானதல்ல. இத்தகைய தீர்வை நடைமுறைப்படுத்தக் கூடிய ஜனாதிபதியையும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அவ ருக்குச் சாதகமான அரசாங்கத்தையும் தெரிவு செய்வதன் மூலம் இதைச் சாதிக்கலாம். இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு மேலான தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் நம்பகத்தன்மை உடையவராக இன்றைய ஜனாதிபதியே உள் ளார். கடந்த காலங்களில் அவர் தெரிவித்த கருத்துகளும் இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றச் செயற்பாடுகளும் இந்த நம் பகத்தன்மைக்குக் காரணங்களாகின்றன. மேலும், ஜனாதிபதியி டம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு கையளித்த அறிக்கையில் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு மேலான தீர்வுக்குரிய ஆலோசனைகள் உள்ளன. இவ்வாலோசனைகளை நடைமுறைப்படுத்துவது அரசியல் தீர்வுக் கான நகர்வின் ஆரோக்கியமான ஆரம்பமாக இருக்கும்

0 commentaires :

Post a Comment