12/25/2009

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நத்தார் (கிறிஸ்மஸ்) பண்டிகை வாழ்த்துச் செய்தி


கிழக்கு மாகாண முதலமைச்சரின் நத்தார் (கிறிஸ்மஸ்) பண்டிகை வாழ்த்துச் செய்தி

copy-of-copy-of-img_8960நத்தார் பண்டிகையினை கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் பேருவகை அடைகின்றேன்.
மானிடம் சிறக்க, மானிடம் பெருமைப்பட மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின் அன்பையும், சகோதரத்துவத்தினையும் பெருக்கெடுத்திடச் செய்ய இயேசுபிரான் அவதரித்த இத்தினமானது மனித குல வரலாற்றின் திருப்பத்தின் உச்சக்கட்டமாகும்.
மாட்டுத் தொழுவத்தில் ஏழ்மையின் வடிவில் பெத்தலகேம் நகரில் அவதரித்த யேசுபிரானின் தியாகங்கள், போதனைகள்untitled11 எல்லாம் மானிடம் சிறப்பதற்கான வழிகளை காட்டி நிற்கின்றது. இருந்தபோதும் அத்தியாகங்களும் போதனைகளும் சிலரால் உரிய முறையில் பின்பற்றப்படாமையினால் மனிதர்களுக்குள் யுத்தமும், நம்பிக்கையீனங்களும், அடக்குமுறைகளும் எங்கும் பரவி நிற்கின்றன.
கடந்த காலங்களை விட ஒப்பீட்டளவில் ஒரு அமைதியான சூழ்நிலையில் இந் நத்தார் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு எம் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது. கொழுந்து விட்டெரிந்த கொடிய யுத்தம் இன மத மொழி பேதமின்றி அனைத்து மக்களையும் அவலத்திற்கும், அழிவிற்கும் உள்ளாக்கியதடன், நாட்டின் நிரந்தர அமைதி, சகோதரத்துவம், இஸ்த்திரத் தன்மைக்கும் பாரிய சவாலாக அமைந்தது. யுத்தம் முடிந்து விட்ட இந்நாளில் அனைத்து மக்களது உரிமைகளையும் மதித்து பிறரின் உரிமையில் தலையிடாமல் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு இந் நத்தார் பண்டிகை ஓர் களமாக அமையட்டும்.



0 commentaires :

Post a Comment