12/20/2009

ஜனாதிபதித் தேர்தலிலும் மக்கள் எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை கிடைத்துள்ளது.- நாகலிங்கம் திரவியம் ( ஜெயம் )



நாகலிங்கம் திரவியம் ( ஜெயம் )

jeyam__vcஎதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் மக்கள் எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் ( ஜெயம் ) கூறுகின்றார்.

மாகாண முதலமைச்சர் நிதியிலிருந்து வாழைச்சேனை மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 140 பேருக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறினார்.

வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 50 பேருக்கும் ,வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 90 பேருக்கும் தலா ரூபா 10 ஆயிரம் என வாழ்வாதார நிதி உதவி இத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் தொடர்ந்தும் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் (ஜெயம் )

” கடந்த 25 வருடங்களாக எமது பிரதேசங்களில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் சுதந்திரமாக எதனையும் சிந்தித்து செயல்படக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.

ஆனால் இப்போது அந்த நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு மக்கள் எதனையும் சுதந்திரமாக சிந்தித்து செயல்படக் கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்.

இந் நிலையில் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் சுதந்திரமாக வாக்களிக்கும் போது அதனை நன்றியுடன் நினைவு கூறிக் கொள்ள வேண்டும் .

கடந்த மாகாண சபைத் தேர்தலில் எமது மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஒரு பகுதியினர் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை.அதனுடைய தாக்கத்தை இப்போது நாம் அனுபவித்து வருகின்றோம்.அப்படியான தவறுகளை எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் விடக் கூடாது.

கடந்த கால தேர்தலிகளிலே ஆயுதங்கள் தாங்கியவர்களின் அழுத்தங்கள் காரனமாக மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதிருந்ததாக ஒரு கருத்து இருந்தது.ஆனால் இப்போது அப்படி யாரும் கூற முடியாது” என்றும் குறிப்பிட்டார்

இந் நிகழ்வுகளில் வாகரைப் பிரதேச செயலாளர் ஆர.;ராகுலநாயகி ,வாழைச்சேனை எதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு ,பிரதேச சபை உறுப்பினர் க.நவராசலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர.

jeyam_vc_2

0 commentaires :

Post a Comment