12/16/2009

நிலாவெளியில் ஆயுர்வேத மருத்துவமனை முதலமைச்சரினால் திறந்து வைப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி பிரதேசத்தில் கோபாலபுரம் எனும் கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றினை திறந்து வைத்தார்.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர், ஆரோக்கியமான சமுக அமைப்பிற்கு சுகாதாரம் என்பது மிகவும் இன்றியமையாதது. அதில் ஓர் அங்கமான ஆயர்வேத சித்த மருத்துவம் என்பது மிகவும் புராதன காலம்தொட்டு எமது கிராம மக்களுடைய வாழ்க்கையில் பாரியளவு செல்வாக்குச் செலுத்தி வந்திருக்கின்றது. ஆனால் இன்று அவ்வாறல்ல இதன் முக்கியத்தவம் நகரங்களிலும் உணரப்பட்டு, அதற்கான தேவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே இவ் ஆயுர்வேத மருத்துவமனை ஊடாக இக்கிராம மக்கள் முழுமையான பலனை அடைய வேண்டும். அதற்கு இப்பிரதேச மக்கள் இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை நிருவாகத்தினரக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தோடர்ந்து உரையாற்றுகையில் தற்போதைய காலம் தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. இதற்கு காரணம் எமது நாட்டின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தேர்தல் காலமாக அமைந்திருக்கின்றது. இதில் சிறுபான்மை இனமாக காணப்படுகின்ற தமிழ் பேசும் மக்கள் யாரை ஜனாதிபதியாக்குவது என்பதில் மிகவும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள். தற்போது கிழக்கு மாகாணத்திலே அபிவிருத்தியுடன் கூடிய ஜனநாக சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கியவர் எமது ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராயபக்ஷ அவர்களே ஆவர். எனவே இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை மென்மேலும் நாம் எமது மாகாணத்திலர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால், அவரையே மீண்டும் நாட்டின் தலைவராக்கி அப்பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருமித்து ஜனாதிபதி மஹிந்த ராயபக்ஷ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் திரமதி கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆயுர்வேத வைத்தியசாலை பணிப்பாளர்,சுகாதார அமைச்சின் செயலாளர் யு.எல்.எ. அஸீஸ், முதலமைச்சரின் செயலாளர் திரமதி ரஞ்சினி நடராசபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

img_9517

img_9521

img_9524

img_9542




0 commentaires :

Post a Comment