12/17/2009

ஐ.தே.க. ஆட்சியில் இருந்த போதே, முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்’

வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் ரணிலின் ஐக்கிய தேசியக் கட் சிக் காலத்திலேதான் தமது சொந்த இடங்களை விட்டு சொப்பிங் பேக் குடன் வெளியேற்றப்பட்டார்கள் என் பதை ஒருபோதும் மறக்கமாட்டார் கள் என கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் முஹாஜிரின் கிராமத்திலு ள்ள றூகம் வித்தியாலயத்தில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில் கெளரவ அதிதியாக கலந்துகொண்டு உரையா ற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிபர் என். எல். எம். மன்சூரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 85, 90ம் ஆண்டுகளில் ஆயுததாரிகளினால் பல வந்தமாக வெளியேற்றப்பட்ட இம்ம க்கள் நாட்டின் நாலா பாகத்திலும் சிதறி வாழ்ந்தார்கள்.

இவர்களை தத் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேற்றி நிம்மதி சந்தோசத்துடன் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வழியமைத்த எமது கெளரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறச் செய்வது முஸ்லிம்களின் நன்றிக்கட னாகும்.

வெளியேற்றப்பட்ட இம்மக்கள் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் குடி யேறி தமது பாரம்பரிய தொழிலை மேற்கொள்ள வழியமைத்தவர் எமது ஜனாதிபதியே. இன்று நாட்டின் சகல பாகங்களிலும் ஐ. தே. கட்சிக்கு வாக்கமளித்த மக்கள் அணி அணி யாய் வந்து எமது ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதை பார்க்கும்போது அவர்கள் உண்மையினை உணர்ந்தார்கள் என்பது தெளிவாகிறது.

முஸ்லிம்களாகிய நாம் எமது ஜனாதிபதியை வெற்றிபெற வைப்பதன் மூலமே ஜாதி மத வேறுபாடில்லாத ஒரு நாட்டினை காண முடிவதுடன் நிம்மதியுடன் சந்தோசமாகவும் வாழ முடியும் என்றார்.


0 commentaires :

Post a Comment