12/21/2009
| 0 commentaires |
நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு: அரசியல் பதற்றம்
நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூன்று நாள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதையடுத்து அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ருக்மாங்கத் கத்வாலை மீண்டும் கொண்டுவருவதற்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முந்தைய பிரசண்டா ஆட்சியின் போது பதவி நீக்கம் செய்யப்பட்டவர். அவரை மீண்டும் கொண்டுவருவதற்கு அதிபர் ராம் பரண் யாதவ் ஒப்புதல் அளித்துள்ளதுடன் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களாட்சியில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நேபாள அதிபர் செயல்படுவதால் அதை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாள் தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தத்துக்கு மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களிடையே தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது நேபாள காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர் ஜலநாத் கனல் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டாவை ஜலநாத் கனல் சந்தித்து வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார். இதர கட்சித் தலைவர்களுடனும் கொய்ராலா மாலையில் ஆலோசனை நடத்தினார். முன்னதாக கொய்ராலா பிரசண்டா இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. நோபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு குறித்து இறுதி செய்யப்பட்டு விடும் என்று பிரசண்டாவிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment