12/26/2009

அச்சகம் மீண்டும் த.ம.வி.பு கட்சிக்கே. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த ஒரு வருட காலமாக த.ம.வி.பு கட்சிக்கு சொந்தமான மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள அச்சகம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அவர்களால் தொடரப்பட்ட மேற்படி வழக்கானது இன்று(24.12.2009) தீர்ப்புக்காக எடுக்கப்பட்டது. இத்தீர்ப்பின் பிரகாரம், குறித்த அச்சகமானது த.ம.வி.பு கட்சிக்கே சொந்தமானது என மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அமைச்சர் கருணா அவர்களால் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழலை பத்திரிகையினை வெளியிட்டு வந்த அக்குறித்த அச்சகமானது தமக்கே சொந்தமானது எனவும், தானே அனைத்து உடமைக்கும் சொந்தக்காரர் எனவும் குறிப்பிட்டு மேற்படி வழக்கினை தொடர்;திருந்தமை குறிப்பிடத்தக்கது, ஆனால் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் பிரகாரம் நேற்றிலிருந்து அச்சகமும், அதில் உள்ள அனைத்து சொத்துக்களும் த.ம.வி.பு கட்சிக்கே உரித்தானது என தீர்ப்பளிக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அச்சகத்தை உத்தியோகபூர்வமான திறந்து வைத்து தமது அச்சக வேலைகளை ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை பட்டாசுகள் கொழுத்தி மக்கள் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
img_0519

img_0528

img_0534

img_0547




0 commentaires :

Post a Comment