12/21/2009

திருமலையிலும் ரயில் பஸ் சேவை அறிமுகம்





கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு. கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இந்திய அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்; பிரகாரம் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ரயில் பஸ் சேவை, நேற்று திருமலையில் அறிமகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பிரதம திதியாக கலந்து கொண்டனர்,மற்றும் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, மாகாண சபை தவிசாளர் பாயிஸ், மாகாண சபை உறுப்பினர்களான ஆரியவதி கலப்பதி, குணவர்த்தன ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர். நேற்று பிற்பகல் 03..30 மணியளவில் திருமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் அவர்கள், இந்த ரயில் பஸ் சேவையினை கௌரவ அதிதிகளாக ஏற்படுத்தியதன் முழுப்பொறுப்பும் கிழக்கு மாகாண முதலமைச்சரையே சேரும். அவர் இந்திய அரசுடன் மேற்ககொண்ட பேச்சுவார்தையின் நிமித்தமே இச்சேவையினை இங்கு அறிமுகம் செய்ய முடிந்தது எனக் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் அவர்கள் கடந்த 3 தசாப்தங்களாக அழிவடைந்த கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசினால் ரயில் பஸ் அன்பளிப்பு செய்யப்பட்டமைக்கு நன்றி தெரிவித்ததோடு, இதனை போன்று எதிர் காலத்திலும் எமது மாகாணம் மென்மேலும் அபிவிருத்தியினை காண நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நாம் வெற்றிபெறச் செய்வதன் மூலமே அபிவிருத்தியினை நாம் அடையலாம் எனவும் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment