12/20/2009

அபிவிருத்தியில் அனைவருமே பங்காளிகள்தான்-கிழக்கு மாகாண முதலமைச்சர்.



அபிவிருத்தி என்கின்ற போது அரசியல் வாதிகள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் என அனைவருமே பங்காளிகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவ் அபிவிருத்தி நிலையானதாக இருக்கும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்தார். இன்று திருகோணமலை சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், கிழக்கு மாகாணத்தில் 6 திணைக்களங்களிலும் 210 தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்றார்கள். இவர்கள் அனைவரினதும் பணியானது அபிவிருத்தியில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதாவது எந்த ஓர் அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருந்தாலும் தொழிநுட்ப உத்தியோகத்தரின் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் மேற்பார்வை மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. ஒரு சிலரது அசமந்த போக்கின் காரணமாக எமது மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளில் பாரிய பின்னடைவு ஏற்படுகின்றது.
இவைகள் எல்லாம் இல்லாது எதிர்வருகின்ற ஆண்டு ஓர் அபிவிருத்தி ஆண்டாக அமைவதற்கு அனைத்து அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் அனைவருமே பங்காளிகளாக மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இரண்டு நாடகளாக நடைபெறும் இச்செயலமர்வில் கலந்து கொண்ட தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர்களினது பிரச்சினைகள் தமது சம்பள முரண்பாடுகள், இடமாற்றம், சம்பள் அதிகரிப்பு, பிரயாணக் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு போன்ற பல பிரச்சினைகள் முதலமைச்சரினது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை முதலமைச்சர் சீர் செய்து தருவதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர்,உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) பாஸ்கரதாஸ், மற்றும் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment