1989 பொதுத்தேர்தல் கூட்டங்களில் “சிங்கள பேரினவாதம்” “ தமிழ் பேரினவாதம்” ஆகியவற்றிற்கெதிராக முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரச்சாரங்கள் முஸ்லிம் காங்கிரசின் மேடைகளில் அதிகளவில் முடுக்கிவிடப்பட்டன. இலங்கயின் பிரதான கட்சிகளில் அங்கத்துவம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் உறுப்பினர்களின் குற்றங்கள் மேடைகளில் சிலாகித்துபேசப்பட்டன ; முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யாப்பு குர்ஆன் ஹதீஸ் என்பவற்றின் அடிப்படையில் தான் செயற்படும் என்று பாமர முஸ்லிம் மக்களினை மதத்தினூடாக உள்வாங்கும் தமது அரசியல் பிரவேசத்துக்கு சுருதி சேர்க்கும் செயற்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரச்சாரங்களை முன்னெடுத்தது. முஸ்லிம் மத நம்பிக்கையின் அடிப்படைக்கு சில முஸ்லிம் அமைச்சர்கள் எதிராக செயற்படுகிறார்கள் என்ற முஸ்லிம் காங்கிரசின் பிரச்சாரத்தில் முன்னால் வணிக வியாபார துறை அமைச்சர் ஏ .ஆர்.எம். மன்சூர் ஒருதடவை 1980களில் தலதா மாளிகைக்கு சென்று அங்கு மல் பூஜா எனப்படும் மலர் தட்டினை காவிச் சென்றார் என்ற குற்றச்சாட்டை வைத்து இவ்வாறு பேரின வாதிகளுக்கு அவர்களது சமயச்சடங்குகளில் கூட கலந்து தனித்துவம் இழந்து, முஸ்லிம் அரசியல் வாதிகள் அவர்களது மத நம்பிக்கையினை கைவிட்டு செயற்படுவதாகவும்- தட்டு தூக்குவதாகவும் பரிகாசம் செய்தனர் , இவ்வாறான மதத்தினை அடிப்படையாகக்கொண்ட பிரச்சாரங்கள் இலகுவில் ஏற்கனவே செல்வாக்குப்பெற்றிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தியது. ஒருதடவை ஏ .ஆர். எம். மன்சூர் அவர்கள் அஷ்ரப் நாடாளுமன்றத்தில் அரபு மொழி பிரார்த்தனையுடன் தனது உரைகளை ஆரம்பிப்பதுபோல் தங்களுக்கும் முடியும் ஆனால் அவை எல்லாம் தந்திர வேலை என்று என்னிடம் குற்றம் சாட்டினார். ஆனால் சுமார் பத்து வருடங்களின் பின்னர் ( ஜூலை 1997 ) முஸ்லிம் காங்கிரஸ் பரிகசித்த, குறைகண்ட அதே சம்பவம் அஷ்ரபினால் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு அஸ்ரப் அமைச்சராக இருந்தபோது முவைக்கப்பட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ரூபவாகினி பின்னிரவு தமிழ் நிகழ்வொன்றில் தான் தவறு விட்டதை ஏற்றுக் கொண்டார், ஆயினும் தான் மலர்கள் எதனையும் சிலைகளுக்கு முன்பாக கொண்டு செல்லவில்லை - வைக்கவில்லை- என்று குறிப்பிட்டார். சட்டத்தில் துளை ( Loophole) கண்டு வாதாடுவதுபோல் அஸ்ரப் மலர் பூஜாவுக்கு தான் தட்டு தூக்கியது பற்றி கூறாமல் தான் சிலைக்கு முன்பாக கொண்டு செல்லவில்லை என்று குறிப்பிட்டார் ஜம்மியத்துல் உலமா சபை (மத அறிஞர்களின் சபை) சார்பாக மௌலவி ரியால் அவர்கள் இஸ்லாத்துக்கு முரண்பட்ட சமயச் செயலில் பங்கு கொண்டமைக்காக பச்சாதபம் கொள்ளக் கோரி . கடிதம் எழுதி இருந்தார். இக்கடிதத்தில் அவர்கள் திகவாபிய பிரதேச புனருத்தாருண சம்பிரதாய நிகழ்வுகளில் மல் பூஜா எனப்படும் மலர் பூஜை செய்யும் -மலர் தட்டினை காவிச்செல்லுதல்- என்ற குற்றச்சாட்டுடன் அந்நிகழ்வு நடைபெற்ற தினமான வெள்ளிக்கிழமை கட்டாய ஜஉம்மா தொழுகையிலும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் முக்கிய தவறாக குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காகிரசின் மஜ்லிஷுள் சூரா எனும் ஆலோசனை குழுவின் இரண்டு பிரதிநிதிகளில் ஒருவர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிநிதிகளில் ஒருவராக இருப்பதனை கட்சியின் யாப்பு விதந்துரைக்கிறது அதன். அடிப்படையில் அதிகாரத்திலுள்ள கட்சியின் அமைச்சரினை உலமா உடனடியாக கேள்விக்குட்படுத்தவில்லை , மாறாக அழுத்தங்களின் காரணமாக அவர்கள் செயற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டு அன்று அவர்கள் மீதும் சுமத்தப்பட்டது. ஆனால் மறுபுறம் அன்று கலந்துகொண்டவர்களுக்காக தனியாக பிறிதொரு ஜஉம்மா தொழுகையை தென் கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை துறையின் தலைவர் டாக்டர் எம். கே. காலிதீன் நடத்தியதாகவும் கூறப்பட்டது. அஸ்ரப் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு புதிய ஷ்ரியா கவுன்சிலை அமைக்க முற்பட்டார், ஆயினும் அது நடைமுறையில் செயற்படமுடியவில்லை ..இவ்வாறு செய்வது ஒரு பௌத்த நாட்டில் தவிர்க்கமுடியாதது என்று நியாயம் வேறு இப்போது கற்பிக்கும் சிலரைக் காணமுடிகிறது. இவர்கள் யாரும் மன்சூரும் முஹம்மதுவும் செய்தபோது மட்டும் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இதனை கண்டனர் இப்போது இதை கண்டுகொள்ளகூடாது என்பது முஸ்லிம் கட்சிக்காரர்களின் புது அனுமுறைபோலும். அவ்வாறான விமர்சனம் மீண்டும் சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீதும் அவரின் அண்மிய தலதா மாளிகை விஜயத்தின் பின்னர் எழுந்திருக்கிறது. அஸ்ரப்பும் ஹக்கீமும் .மத சமூக அரசியல் விழிப்புணர்வு இயக்கம் என்று சொல்லப்படும் ஜமா அத தே இஸ்லாமிய ஸ்தாபனத்துடன் ஆரம்பத்தில் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள் என்பதும் இங்கு குறிபிடத்தக்கது. நிகழவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குதிப்பதற்காக ஐ.தே.கவுடன் கூட்டு ஏற்படுத்தியவுடன் சம்பிரதாய பூர்வமாக தமது கூட்டினை அன்குர்ரர்ப்பணம் செய்யும் நிகழ்வாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹா கண்டியிலுள்ள .தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்குள்ள பௌத்த பிரதம மதகுருவின் ஆசீர்வாதம் பெற்றபோது ஹக்கீமும் அவருடன் சென்று அதே விதமான ஆசீர்வாததினை பெற்றுக்கொண்டார் . ..இது சிறு சலசலப்பைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது கொழும்பு ஜாவத்த ஜும்மா பள்ளிவாசலில் தமது கட்சித் தீர்மானங்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது அஸ்ரப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் வெளிப்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்தமை அங்கு அவர்கள் அஸ்ரப் அடக்கம் செயப்பட்ட இடத்திற்காக -முக்கியத்துவமளித்து- தமது தேர்தல் பணிகளை முடிக்கி விட்டிருந்தால் அவை நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். இன்று இலங்கையில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறு இடங்களில் பல்வேறுபட்ட அரசியல் நிர்வாக கட்டமைப்புக்களில் தங்களது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டி அங்கத்துவம் வகிக்கும் சூழலில் அவர்களில் எவரும் பேருவல சம்பவங்கள் குறித்து மௌனமாகவிருந்து தமது செல்வாக்குகளை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பத்திற்கு முன்னர் ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் அமைச்சர்கள் இவ்வாறான பிற மத சடங்குகளில் சில இறுக்கமான இஸ்லாமிய வரம்புகளை மீறி பங்குபற்றி இருக்கிறார்கள் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையான " கலிமா " வை தனது கட்சி கொடிகளில் பொறித்து இஸ்லாமிய மதக்கட்சியாக முஸ்லிம் மக்களுக்குள் அடையாளப்படுத்தி முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பது கூட ஒரு மதக்கடமை போல் காட்டி வந்திருக்கிறார்கள். முதன் முதலில் 1987 மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் அவர்கள் மறுமையில் பதில் சொல்லவேண்டிவரும் என்றவாறான எச்சரிக்கைகளை சேகு இஸ்ஸதீன் போன்ற முஸ்லிம் காங்கிரஸ் ஜாம்பவான்கள் விட்டிருக்கிறார்கள் என்பதை இன்னமும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் விட சென்ற கிழக்கு மாகான சபை தேர்தலின்போது ஓட்டமாவடியில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெறுவதில் பல தடைகளை அங்குள்ள அமைச்சர் அமீர் அலி போட்டதால் அவற்றை தாண்டி நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் தனது உயிருக்கு ஆபத்து உண்டென்றும் அவ்வாறு அங்கு மரணிக்க நேர்ந்தால் ஹக்கீம் தான் கட்சின் தொப்பியுடனும் சால்வையுடனும் மரணித்தால் அது தனது பாக்கியமாகும் என்ற தொனிப்பட சூளுரைத்தார். இதுவெல்லாம் முஸ்லிம் அடிப்படை நம்பிக்கை களுக்கு முரணான கருத்துக்களாகும் என்பதை யாருமே சுட்டிக்காட்டதவரை முஸ்லிம் மக்கள் இம் முட்டாள்தனமான கருத்துரைகளை கேட்டு " அல்லாஹு அக்பர்" " சிந்தா பாத்" என்று மட்டும் தாராளமாக சத்தமிடப்போகிறார்கள்
0 commentaires :
Post a Comment