நினைவஞ்சலிக் கூட்டம்
த.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றிய அமரர் குமாரசுவாமி நந்திகோபன் (ரகு) அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் இன்று (09.12.2009) திரகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குமாரசுவாமி நந்தகோபன் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த இவ் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக தற்போதைய த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். அமரர் குமாரசுவாமி நந்தகோபன் அவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. கலந்து கொண்டவர்களினால் அன்னாருக்கான இரங்கலுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
ஆமரர் குமாரசுவாமி நந்தகோபனின் பெயரில் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள குமாரசுவாமி நந்தகோபன் நற்பணி மன்றம் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தற்போது மிகவும் வறுமை நிலையினை எதிர்கொள்கின்ற சுமார் ஐம்பது குடும்பங்களுக்கு நிதி நன்கொடைகளும், பிரயாணப் பைகளும் அமரர் ரகு அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கி வைக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment