12/16/2009

தேசத்தின் அபிவிருத்திக்காக ஜனாதிபதிக்கு முஸ்லிம்களின் வாக்குகள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் சம்மேளன செயலாளர்
மொகம்மது அலிபாரூக்... -



அப்பாவி மக்களையும் எதிர்கால சந்ததியினர்க்கு உரித்தான மனித வளங்களையும் மனிதாபிமானத்தையும் அழித்தொழித்த குரூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த, மீண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமைக்கு வித்திட்ட சுதந்திரத்தின் உணர்வுகளை அனுபவிக்க தலைமை தாங்கிச் சென்ற மாண்புமிகு ஜனாதிபதி, முப்படைகளின் தலைவர், மக்களின் நண்பன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் சம்மேளனம் நாடளாவிய ரீதியில் பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளது.

முஸ்லிம் சம்மேளனத்தின் ஜனாதிபதி தேர்தல் பிரசார அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று 16ந் திகதி புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு முஸ்லிம் சிரேஷ்ட அமைச்சர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை, பிரதேசசபைத் தலைவர்கள், பிரதிநிதிகள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் பிரதான நோக்கம், ஜனாதிபதித் தேர்தல் பிரசார வேலைகளை மாவட்ட ரீதியாகவும், தேர்தல் தொகுதி, கிராம ரீதியாகவும் மும்முரமாக எடுத்துச் செல்லும் பொறுப்பை மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவ்வப்பிரதேசங்களிலுள்ள சிரேஷ்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் கையளிப்பதும் அதற்கான ஆலோசனைகளை வழங்கி நெறிப்படுத்துவதுமாகும்.

அத்துடன் தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்படும் வாய்ப்பிரசாரங்களுக்குப் பதிலடி கொடுப்பதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

முதன் முதலில் இலங்கையில் பெயரையும் புகழையும் உலக மட்டத்தில் எடுத்துச் சென்று உலகப் படத்தில் எமது நாட்டின் பெயரைப் பதியவைத்த அரேபிய இஸ்லாமிய வர்த்தகர்களின் வழிவந்தவர்களான நாம் “இந்நாட்டின் வந்தேறு குடிகளல்ல” என்பதனையும் சுற்றுலாப் பயணிகளாக முஸ்லிம்கள், இங்கு வரவில்லை என்பதனையும் அழுத்த திருத்தமாக எடுத்துக்காட்டி நாம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் போதும், ஏகாதிபத்திய காலனித்துவவாதிகள் இந்நாட்டை ஆக்கிரமிக்க வந்தபோதும் சிங்கள மன்னர்களுக்கும் மக்களுக்கும் தோள்கொடுத்து இந்நாட்டை காப்பாற்றப் போராடிய தேசாபிமானிகளான முஸ்லிம் மூதாதையர்களின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதனை மீண்டும் வரலாற்றில் பதிக்க, தேசத் துரோகிகளுடன் இணைய மாட்டோம் என்பதனை உறுதிப்படுத்தும் ஜனாதிபதித் தேர்தலில் நாமும் பங்காளிகள் என்பதனை முன்வைத்து வெற்றியின் பலாபலன்களை எம் சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்கவே இவ்வழைப்பு.

வெற்றியின் பின் எம் சமூகத்தின் உரிமைகளை பெற்றெடுக்க போராடும் ஒரு சக்தியாக இவ்வமைப்பை முன்னெடுக்க சுற்றுலா அபிவிருத்தி அமைச்சரும் கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கண்டி மாவட்ட முஸ்லிம் சம்மேளன தலைவருமான சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசியுடனும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களின் பங்களிப்புடனும் நடைபெறுகின்றது


0 commentaires :

Post a Comment