12/14/2009

கடை விரித்தேன் கொள்வாரில்லையே ” ஒரு சமூக பிரச்சினையின் அதிர்வலைககளும் அணுகுமுறைகளும்

எஸ்.எம்.எம்.பஷீர்




ஏறாவூர் பழைய சந்தை முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏறாவூரின் மூன்றாம் குறிச்சி பகுதியில் அமைந்திருகிறது. இதில் முஸ்லிம்களே காலங்காலமாக வியாபாரம் செய்து வருகிறார்கள் .எனினும் இச்சந்தையின் இடம்போக்கின்மை வளர்ந்துவரும் சனப்பெருக்கம் சிங்கள வியாபரிகளின் அதிகரித்த பொருளாதார நடவடிக்கையாலும்; சிங்கள சமூகம் ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட சவுக்கடி தளவாய் புன்னைக்குடா பிரதேசங்களில் வாழ்ந்தமையினாலும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான சந்தையை கொண்டிராமையினாலும் தமிழர்கள் அதிகம் வாழும் ஏறாவூர் நாலாம் குறிச்சி பகுதியில் புதிய சந்தை எழுபது 1970 களில் நிர்மானிக்கப்பட்டு செயற்படத் தொடங்கியது.

எனினும் முஸ்லிம் வியாபாரிகள் முஸ்லிம் மக்கள் தங்களது பிரதேசத்துக்கு தூரமான புதிய சந்தைக்கு இடம் பெயர்வதினை ஆதரிக்கவில்லை. மூவின சமூகத்தினரையும் கொண்ட வியாபாரிகளை கொண்ட புதிய சந்தை முழுமையாக கைவிடப்பட்டது. இச்சந்தை பகுதியில் அருகாமையில் அமைந்துள்ள காளிகோயில் வீதியில் உள்ள விகாரையின் புத்தபிக்கு புலிகளின் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானால் நெற்றிப்பொட்டில் 1985 அளவில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். மேலும் இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமும் அன்று கிழக்கில் காணப்பட்ட சிங்களவர்களுக்கு எதிரான புலிகளின் செயற்பாடுகள் காரணமாக சந்தை வியாபாரிகள் மீண்டும் ஏறாவூர் பழைய சந்தைக்கு இடம்பெயர தமிழ் சந்தை வியாபாரிகள் செங்கலடிக்கு இடம்பெயர்ந்தனர்.

ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகள் காரணமாக அங்கு காணப்படும் சிங்கள வியாபாரிகளின் அதிகரித்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சிங்கள மக்கள் தங்களது முன்னைய வியாபார தலங்களையும், பாடசாலைகளையும், வணக்கத்தலங்களையும் புதுப்பிக்கின்றனர். இச்செயற்பாடுகளால் மீண்டும் குடியேறுகின்ற நிலைமை இன்று கிழக்கின் பல பிரதேசங்களில் காணப்படுகிறது. அவ்வாறான சில மீள் குடியேற்றங்கள் சில வேளைகளில், சில பிரதேசங்களில் முஸ்லிம் தமிழ் மக்களின் அதிருப்திக்கு காரணமானாலும் இன அரசியல் செய்யும் சக்திகளுக்கும் கட்சிகளுக்கும் தம்மை இனத்தின் பிரதிநிதிகளாக தக்கவைதுகொள்வதற்கும் இச்செயற்பாடுகள் பெரிதும் துணை புரிகின்றன. மறுபுறம் அதிகாரத்திலுள்ள காவல் துறையினரும் இத்தகைய செயற்பாடுகள் குறித்த முறைப்பாடுகளில் காட்டுகின்ற அலட்சியம், அதிகார துஸ்பிரயோகம், பக்கச்சார்பு என்பன காலங்காலமாக “சிங்கள ஆக்கிரமிப்பு” குறித்த கருத்துக்களை உள்வாங்கி அவ்வாறான அனுபவங்களையும் சில காலகட்டங்களில் கொண்டிருக்கின்ற சமூகத்தில் இந்த புதிய சந்தை கடைகளை முழுமையாக சிங்கள வியாபாரிகள் கைக்கொள்ளும் நிலைமை அங்கு வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆட்சேபனைக்கு உள்ளாகியுள்ளது.

0 commentaires :

Post a Comment