பிலிப்பைன்ஸின் அல்பே மாகாணத்திலுள்ள எரிமலைகள் வெடிக்கும் அபாயமுள்ளதால் அங்குள்ள மக்களில் பெருமளவானோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள இரண்டு எரிமலைகள் வெடித்தன. இதனால் எரிதணல்களும், சாம்பல்களும் இப்பிரதேசமெங்கும் படிந்து காணப்பட்டன. மக்கள் அச்சமடைந்ததால் வெளியேறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர்.
மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த மக்களை ஏற்றி வருவதற்காக இருபது இராணுவ வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 340 கி. மீற்றர் தூரத்தில் அல்பே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். கடந்த ஒரு வாரமாக இங்குள்ள எரிமலைகள் குமுறத் தொடங்கின.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இங்குள்ள மலைகளில் இரண்டு வெடித்தன.
0 commentaires :
Post a Comment