தீர்மானத்தில் மாற்றமில்லை என்கிறார் சிவநேசதுரை சந்திரகாந்தன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றமும் கிடையாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை நாம் மாற்றியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்து வரும் கருத்தை மறுத்துள்ள அவர் மக்களை குழப்பும் வகையில் அவை செய்தி வெளியிடுவதாக குறிப்பிட்டார். மேற்படி ஊடகங்கள் தங்களையும் குழப்பி மக்களையும் குழப்ப முயல்வதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார். ஜனாதிபதியின் வெற்றிக்கு தமது கட்சி பாடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை தமிழ் மக்கள் விடுதலை முன்னணி மாற்றிக் கொண்டுள்ளதாக சில ஊடகங்கள் கடந்த தினங்களில் செய்தி வெளியிட்டிரு ந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். |
|
0 commentaires :
Post a Comment