மண்முனைப்பற்று பிரதேச செயலகம் அண்மையில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விழாவை ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டத்தில் நடாத்தியது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் டாக்டர் எஸ். கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் எம். நடேசராசா, உதவி பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம், தொழில் உதவி ஆணையாளர் கிறிஸ்கானந்தராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ‘விழி’ எனும் சிறப்பு மலர் ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு இடைவிலகிய மாணவர்களுக்கான கல்வி உப கரணங்கள், மற்றும் சிறுவர் கழக நூலகங்களுக்கான புத்தகங்கள் சிசுதிரிய புலமைப் பரிசில் என்பன வழங்கப்பட்டன. ஏழு முதியோர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். இவை தவிர சிறுவர்களின் கலாசார நிகழ்வுகள் இவ்விழாவில் நடைபெற்றதுடன் சிறுவர் தின போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
0 commentaires :
Post a Comment