
கிழக்கு மாகாணத்தில் யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியளமர்த்தப்பட்டுள்ள மூதூர் பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் வைபவம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீள்குடியேற்ற அதிகாரி திரு. அ. செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. முதற்கட்டமாக சுமார் 500 துவிச்சக்கர வண்டிகள் இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கிழக்கு மகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமதி ஜுடி தேவதாஷன் மற்றும் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.



0 commentaires :
Post a Comment