12/15/2009

ஏ9 பாதைக்கூடான பிரயாணம் பற்றி ரணில் விக்கிரமசிங்ஹ பேசுவதைப் போன்ற நகைச் சுவை வேறெதுவும் இருக்க முடியாது.


எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்றிருந்தார். தனது கட்சியின் கட்டுப்பாடுகளு க்கு உள்ளாக முடியாத ஒருவருக்காகச் செய்யும் பிரசாரத்தின்போது ரணில் கூறும் விடயங்களை மக்கள் இலகுவில் நம்பப்போவதில்லை. இவர் அளிக்கும் வாக்குறுதிகளைப் பொன்சேகா நிறைவேற்றுவார் என்பத ற்கு உத்தரவாதம் இல்லை. நாட்டின் பல பாகங்களிலி ருந்து கிடைக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் பார் க்கும்போது பொன்சேகா தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியம் அறவே இல்லை. அவர் தெரிவு செய்யப் பட்டால் என்று ஒரு வாதத்துக்காகப் பார்த்தாலும், ஐக்கிய தேசியக் கட்சி சொல்வதைக் கேட்பாரா அல்லது மக்கள் விடுதலை முன்னணி சொல்வதைக் கேட்பாரா என்பது குழப்பமாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் ஏ9 பாதைக்கூடாக மக்கள் எந்த நேரமும் பிரயாணம் செய்வதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருக்கின்றார். ஏ9 பாதைக்கூடான பிரயாணம் பற்றி ரணில் விக்கிரமசிங்ஹ பேசுவதைப் போன்ற நகைச் சுவை வேறெதுவும் இருக்க முடியாது. இப்போது மக்கள் ஏ9 பாதைக்கூடாக யாழ்ப்பாணத்துக்குப் பிரயா ணம் மேற்கொள்வது அவருக்குத் தெரியாது போலும். தினமும் சொகுசு பஸ்களில் மக்கள் அப்பாதைக் கூடாகப் பிரயாணம் செய்கின்றார்கள். ஏ9 பாதைக்கூடாகப் பிரயாணம் செய்வதாயின் புலிகளின் அனுமதியைப் பெற வேண்டியதும் அவர்களுக்கு வரி செலுத்த வேண்டியதும் அவசியம் என்ற நிலை தனது ஆட்சிக் காலத்தில் நிலவியதை ரணில் இவ்வளவு விரைவில் மறந்திருக்கக்கூடாது. தங்கள் அனுமதி இல் லாமல் ஏ9 பாதைக்கூடாகப் பிரயாணம் செய்வதற்கு நாட்டின் பிரதமரைக் கூடப் புலிகள் அக்காலத்தில் அனுமதிக்கவில்லை. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் பிரதமர் என்ற வகையில் கையொப்பம் இடுவதற்கு ரணில் வவு னியா வரையுமே செல்ல முடிந்தது. அதற்கு அப்பால் செல்வதற்குப் பிரபாகரன் அவருக்கு அனுமதி அளிக்க வில்லை. ஏற்கனவே பிரபாகரன் கையொப்பமிட்ட ஆவணத்தில் இவர் கையொப்பம் வைத்துவிட்டுத் திரும்பினார். இதுதான் ரணிலின் ஆட்சிக் காலத்தில் நிலவிய சமாதானம். உண்மையான சமாதானக் காற்று இப்போது தான் வீசத் தொடங்கியிருக்கின்றது. மக்கள் இப்போது ஏ9 பாதைக்கூடாக எவ்வித கட்டுப் பாடும் இல்லாமல் சென்று வருகின்றார்கள். வன்னியில் புலிகளின் அடக்குமுறைக்கு உட்பட்டிருந்த மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நிலை இப்போது தான் உருவாகியிருக்கின்றது. ஜனவரி 31ந் திகதிக்கு முன் மீள்குடியேற்றம் பூரணமடைந்துவிடும். அதன் பிறகு வன்னிப் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்கள் பிள்ளைகள் ஆயுதப் போராட்டத்துக்காகக் கடத்திச் செல்லப்படு வார்களென அஞ்சத் தேவையில்லை. அந்த அச்சம் காரணமாக மிகக் குறைந்த வயதிலேயே பிள்ளைகளு க்குத் திருமணம் செய்து வைக்கத் தேவையில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்காக யாரையும் பிணை வைக்கத் தேவையில்லை. வன்னி மக்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டமும் இப்போது தலை நிமிர்கின்றது. சமூக, பொருளாதார ரீதியாக மக்கள் பழைய முன்னே ற்றகரமான நிலைக்குத் திரும்புகின்றனர் இவ்வளவு மாற்றங்களும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி யாகப் பதவியேற்ற பின்னர் இடம் பெற்றவை. நீரைப் பருகும்போது அதன் ஊற்றை நினைத்துக்கொள்வது போல, முன்னேற்றகரமான மாற்றங்களின் பலனை அனு பவிக்கும்போது அவற்றுக்குக் காரணகர்த்தாவான ஜனா திபதியை மக்கள் நிச்சயம் நினைத்துக்கொள் வார்கள். இன்றைய ஜனாதிபதியின் ஆட்சியிலேயே வடக்கின் விடியல் சாத்தியம் என்பது மக்களுக்குத் தெரியும்.


0 commentaires :

Post a Comment