பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதி மலைகளால் சூழப்பட்டது. இங்குள்ள மலை வாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் கொள்ளையர்களாக உள்ளனர். இவர்கள் மிண்டானோ பகுதியில் கொலை, கொள்ளைகள் மட்டுமன்றி வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அகுசன் டெல்சர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்குள் புகுந்தது. பின்னர் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என 75 பேரை துப்பாக்கி முனையில் கடத்தினர். பிறகு 17 குழந்தைகள் உட்பட 18 பேரை விடுவித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்கள் தவிர 55 பேரை அவர்கள் கடத்திச் சென்று விட்டனர். இவர்கள் அனைவரையும் மலைப் பகுதியில் உள்ள புராஸ் பெரிதாத் நகரில் அடைத்து வைத்துள்ளனர். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர். தகவல் அறிந்ததும் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கொள்ளையர்கள் பலரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த கடத்தல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கடத்தப்பட்டவர்களை மீட்க கொள்கையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை அதிகாரி லினோ கலிங்கசன் தெரிவித்துள்ளார். |
12/12/2009
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment