கிழக்கின் உதயம் 180 நாள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கென 3011 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் இதுவரை 1797 மில்லியன் ரூபா செலவில் 3885 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது. அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 1113 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன் 675 மில்லியன் ரூபா செலவில் 1215 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 300 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது- மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 923 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 566 மில்லியன் ரூபா செலவில் 1373 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 160 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கென 974 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 556 மில்லியன் ரூபா செலவில் 1294 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 119 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். |
12/12/2009
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment