முஸ்லிம்களுக்கிடையில் இடம்பெற்ற மிக துரதிஷ்டமான அரசியல் வன்முறைகள் ஏறாவூரிலும் காத்தான்குடியிலும் இடம்பெற்றன.பதுயுதீன் மஹ்மூத் அவர்கள் "கிழக்கிஸ்தான்" கோஷத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக இந்த “மந்திர கோஷம்” எந்தவித தாக்கத்தையும் ஏற்பபடுத்தவில்லை என்பதுடன் எதை முன்வைத்தவருக்கோ அல்லது வாக்காளர்களுக்கோ அதன் தாற்பரியம் புரிந்திருக்கவில்லை என்பதுடன் தமிழ் சிங்கள சமூகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. அன்றைய அரசியல் பிரச்சார மேடைகளில் முஸ்லிம்கள் பற்றிய சர்வதேசிய பலம், பாரம்பரியம் அவர்களது உணவு உடை பற்றியெல்லாம் பதியுதீன் அவர்கள் பெருமிதம் கொள்ளச்செய்யும் வகையில் கருத்துக்களை முன்வைத்தார்.
இவை முஸ்லிம்களின் வாக்குகளை அவரது நாடளாவிய கல்விச்சேவையின் பின்னணியில் பெற்ற சமூக பலப்படுத்தலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது. அதற்கமைய முதற்தடவையாக மட்டக்களப்பு தொகுதியில் களமிறங்கிய பதியுதீன் அவர்கள் (21.275)வாக்குகளைப் பெற்றமை ஒரு சாதனை என்பதே பொருத்தமானதாகும். அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய அரசில் சு10ழலில் முக்கிய இரு சம்பவங்களை அன்று நிலவிய இன ஐக்கியத்திற்காக சுட்டிக்காட்டப்பட வேண்டும். மட்டக்களப்பு காளியன்காடு சாஹிராக் கல்லூரி கட்டட நிர்மாணத்துக்காக அன்று மட்டக்களப்பு ராஜன் செல்வநாயகம் எம்.பி நிதி உதவி வழங்கியமையும் மட்டக்களப்பு அரசடிப்பிள்ளயார் கோவில் வீதியில் முஸ்லிம் கனிஷ்ட பாடசாலை கட்டப்பட நிதிஉதவி வழங்கிய ராஜதுரை எம்.பி யும் அன்று செய்த உதவிகள் அம்மக்களால் மறக்கப்படமுடியாதவை.
ஆனால் துரதிஷ்டமுகமாக தமிழரின் ஆயுதப்போரட்டம் தொடங்கி முஸ்லிம்மக்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றும் யாழ் மையவாத தமிழ்; இனவாத அரசியல் ஆயுதப்போராட்டம் முஸ்லிம்களை இன்று சாஹிராக்கல்லூரியை மட்டுமல்ல அரசடிப்பிள்ளயார் கோயில் வீதி பாடசாலையும் இழந்த நிலையை தோற்றுவித்திருக்கிறது. கலாநிதி பதியுதீன் அவர்கள் தன்னை என்றும் ஒரு இலங்கையனாக அடையாளப்படுத்தலில் அவ்வாறு வீரியத்துடன் செயல்படுவதில் என்றுமே உறுதியாகவிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்று நிலவிய அரசியல் சமூக பொருளாதார சு10ழ்நிலைழ்நிலை நிலவுடமை சமூக ஆதிக்க வர்க்கங்கள் என்பனவற்றின் செல்வாக்குகள் மிக ஆழமாக பார்க்கப்படவேண்டும்.
பாகிஸ்தான்" என்ற தனித் தேசத்துக்கான கோரிக்கை எவ்வாறு கருக்கொண்டது என்பதை பின்னோக்கிப் பார்த்தால் இங்கு சுவாரஸ்யமாக இருக்கும் 1930 ல் சேர். அல்லாமா இக்பால் ( Sir. Allama Iqbal ) இந்தியாவின் முஸ்லிம்களை அதிகமாகக்கொண்ட எல்லைப்புற மாகாணங்களை உள்ளடக்கி தனி முஸ்லிம் தேசம் (பாகிஸ்தான் ) பற்றி முதன் முதலில் கருத்தியலை முன்வைத்தார். பின்னர் 1933 ல் சௌத்ரி ரஹ்மத் அலி (Chaudhry Rahmat Ali ) ) எனும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக (University of Cambridge) முஸ்லிம் மாணவர்குழுத்தலைவர் இந்திய முஸ்லிகளின் உள்ளார்ந்த முரண்பாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒத்துக்கொள்ளக்கூடிய தீர்வு பாகிஸ்தான் எனும் தந்தையர் நாடு உருவாவதாகும் என்ற பிரேரணையை முன்வைத்தார்.இந்த பாகிஸ்தான் கோரிக்கை உயிர்ப்பு பெற்றபோது ஈ வே. ரா ( ராமசாமி நாயக்கர்) தமிழ் நாட்டில் இதற்கு ஆதரவளித்தார். ஆனால் சுவாரசியமாக பாகிஸ்தான் உருவாக முன்னரே மரணித்துவிட்ட அல்லாமா இக்பால் இஸ்லாமிய மத அடிப்படையிலான தேசிய வாதம் கடந்த இஸ்லாமிய சர்வதேசிய கருத்தினையும் கொண்டிருந்தார். இவ்வாறான கருத்துக்கள் அவர் பல முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்த பின்னரான கருத்தாகவும் இருக்கல்லாம். எனவேதான் இவர் தனது பார்சிய கவிதையொன்றில்
"ஹார்ஹே முல்க் மில்கே மாஸ்
கே முழ்கி ஹுதாயெ மாஸ்:
" ஒவ்வொரு நாடும் எனது நாடே அந்த நாடும் இறைவனின் நாடே" குறிப்பிட்டிருந்தார்.
1940ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற நீதிக்கட்சியின் சார்பில் திராவிடநாடு கோரிக்கையை ஈ .வே.ரா பெரியார் முவைத்தார் . இது "திராவிடஸ்தான்" என்று அழைக்கப்பட்டாலும் இது அடையப்படமுடியாத வெறும் கோரிக்கையாக காலாவதியாகிப்போனது. ஆனால் இந்த "கிழக்கிஸ்தான்" கோரிக்கை வெறும் வெத்துக் கோஷமாக அந்த பொதுத்தேர்தலுடன் மறந்தும் போய்விட்டது. தேசிய அரசியலில் தமது பங்களிப்பை செய்து பயன் பெறுகின்ற முஸ்லிம் அரசியல் சமூகம் அன்று காணப்பட்டது. தமிழரின் தேசிய அரசியலுக்கெதிரான சு10ழலில் தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் அரசியல் வாதிகள் தமிழ் தேசிய வாதிகளின் கட்சியான தமிழரசுக்கட்சியினரால் "தொப்பி புரட்டிகள்" என்று இனவாத ரீதியில் பரிகசிக்கபட்ட காலகட்டத்தில்தான் தமிழர் கூட்டணியிலும் அஷ்ரப்பும் அவரது சகாக்களும் இணைந்து (1977ல்) தமிழ் ஈழக்கோரிக்கைக்கு குரல் கொடுத்தனர்.
ஆனால் தமிழர் கூட்டணியினரின் குறுந்தேசிய அரசியல் வஞ்சகத்தனத்தை கிழக்கு தமிழ் அரசியல் வாதிகள் தெளிவாக அன்று புரிந்துகொண்டனர். அதனால் அவர்களும் யாழ் மையவாத அரசியல தலைமத்துவங்களால் "துரோகிகள் " என்று பின்னர் அழைக்கப்பட்டனர். இந்த கூட்டணியினரின் "தமிழ் பேசும் மக்கள்" எனும் பொதுமை படுத்தும் தந்திர அரசியல் அணுகுமுறையை அனுபரீதியாக அஸ்ரப பட்டறிவு மூலம் புரிந்து கொண்டார். பின்னர் ஆயுதப்போராட்டமாக தமிழர் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றினைந்து ( அரசியல் ரீதியில் தமிழர் கூட்டணி ஒன்றினைந்தது போல்) போராட்டம் நடத்தி பின்னரும் கிழக்கு தமிழர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து பிளவுபட்டனர்.
இப்பிளவு கருணா எனும் முரளீதரன் பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் போன்ற முக்கிய புலிகளின் உறுப்பினர்களால் ஏட்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனுபங்கள் ஊடாக வரலாறு வேறுவிதமாக திரும்பி நிகழ்ந்துள்ளது என்றாலும் பொருத்தமாகும். மீண்டும் தமிழ் பேசும் மக்கள் என்ற இனிப்பு கலந்த குளிசையை தமிழர் கூட்டணியின் இன்றைய புதிய முகமான தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது “திம்பு” என்னும் பழைய கள்ளை புதிய மொந்தையில் அடைத்துக்கொண்டு முஸ்லிகளின் கிழக்கு அரசியலை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் காங்கிரசை அனைத்துக்கொண்டு அல்லது பரஸ்பரம் இருபகுதியினரும் இணைந்துகொண்டு அரசியல் செய்வதென்பது எவ்வாறு அஸ்ரப் தமிழீழக்கோரிக்கைக்கு கூட்டணி அமைத்த அதே தவறாக எதிர்கால அரசியலில் பார்க்கப்படும்.
இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனதும் அவரது சகபாடிகளினதும் சகுனி அரசியல் குறித்து முஸ்லிம்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிரபாகரன் கொல்லபபட்டபின்னர் அடுத்த இரு மாதத்துள் சம்பந்தன் பங்குகொண்டு உரையாற்றிய வவுனியா உள்ளூரரட்சி மன்றத்தேர்தலின்போது "தமிழர் ஆயுதம்போரட்டம் வட கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை அடைந்து கொள்வதற்கான அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியே. ஆனால் தமிழ் மக்களின் ஆரசியல் போராட்டம் தமிழ் மக்களின் சட்ட பூர்வமான அரசியல் அபிலாசைகள் அடையப்படும் வரை முன்னேடுக்கப்படும் " ( Tamil militancy was a part of the political struggle of the Tamil people to achieve the right to self- determination in the traditional homeland of the Tamil people in the northeast. ..But the political struggle of the Tamil people would go on till the legitimate political aspirations of the Tamil people are achieved” ) என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் தான் சமாதான காலத்தின் போது மூதூரில் அங்கு இடம்பெற்ற சிறு சிறு இன முரண்பாட்டு சம்பவங்களுக்கு ஒசாமா படை காரணம் என்று புலிகளின் இணையத்தளம் கற்பிதம் பண்ணி சர்வதேச ரீதில் முஸ்லிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முற்பட்டபோது அதற்கு இலங்கையின் "தமிழ் பேசும் மக்களின்" அரசியல் பேசும் சம்பந்தன் ஒத்து ஊதியவர் என்பதை முஸ்லிம் காங்கிரஸார் மறக்கலாம்.
ஆனால் முஸ்லிம் மக்கள் மறக்க மாட்டார்கள். இந்த தமிழ் இனவாத அரசியலுல் முஸ்லிம் மக்களை மீண்டும் இழுக்கும் முயற்சிக்கு துணை போகும் முஸ்லிம் அரசியலை மக்கள் அடையாளம் காண வேண்டும்.
0 commentaires :
Post a Comment