11/15/2009

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் தேசிய மாநாட்டை இன்று கொழும்பில் நடத்துகின்றது. ஒரு இலட்சத்து க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றும் இம்மகா நாடு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நடைபெறு வது குறிப்பிடத்தக்கது. ஓரிரு மாதங்களுக்குள் நடக்கப்போ கும் தேர்தல் பற்றிய பல்வேறு ஊகங்கள் வெளிப்படுத்தப்ப டுகின்றன. ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா முதலில் நடைபெறப் போகின்றது என்பது மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் இதற்கான விடை கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றார்கள். மேலும், அரசி யல் அரங்கின் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான தெளி வுபடுத்தல்களையும் இம் மகாநாட்டில் மக்கள் எதிர்பார்க் கின்றார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட் டமை இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக அமைந்தது. சுதந்திர இலங் கையின் முதலாவது அரசாங்கத்துக்குத் தலைமையேற்ற ஐக் கிய தேசியக் கட்சி மேல்தட்டுச் சமூகப் பிரிவினரைப் பிர திநித்துவப் படுத்தும் கட்சியாகவே விளங்கியது. இக்காலத் தில் பிரதான எதிரணியாக விளங்கிய இடதுசாரிக் கட்சிகள் தொழிலாளி வர்க்கத் தலைமைக்கு முக்கியத்துவம் அளித் துச் செயற்பட்டன. விவசாயிகள், சுயபாஷா ஆசிரியர்கள், சுதேச வைத்தியர்கள் போன்ற சமூகப் பிரிவினருக்குத் தலைமைத்துவம் வழங்கும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரங்குக்கு வந்தது. தீவிர வலதும் இல்லாமல் இட தும் இல்லாமல் நடுவழிக் கொள்கையைப் பின்பற்றிய இக் கட்சியினது தலைமையின் கீழ் பல்வேறு சமூகப் பிரிவினர் அணிதிரண்டனர். பஞ்சமகா சக்திகள் என்ற பெயரில் இச் சமூகப் பிரிவினரை அணிசேர்த்து 1956ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வை அரசியல் ஆய்வாளர்கள் சமூகப் புரட்சி என்று சரியாகவே குறிப்பிட்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் 1956ம் ஆண்டு இடம்பெற்ற சமூகப் புரட்சிக்குப் பின்னரே இலங்கையின் சுதந்திரம் அர்த்தபூர்வமானதாகியது. சுதந்திரத்தின் கரும்புள் ளிகளாக விளங்கிய பிரித்தானியாவின் விமானப் படைத் தளமும் கடற்படைத் தளமும் இலங்கை மண்ணிலிருந்து அகற்றப்பட்டன. சுதேச மொழிகளுக்கும் சுதேச வைத்தியத் துக்கும் உரிய இடம் கிடைத்ததும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்க காலத்திலேயே. சுருக்கமாகக் கூறுவதனால், சாதாரண மக்களுக்கு அங்கீகாரம் அளித்தது ஸ்ரீலங்கா சுத ந்திரக் கட்சியே. இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உண்மையான அக்கறையுடன் செய ற்பட்டிருக்கின்றது. இக்கட்சியின் ஆட்சிக் காலங்களில் இன பிரச்சினையின் தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அம் முயற்சியைத் திசை திருப்பும் வகையில் எதிரணியினரும் தமிழ்த் தலைவர்க ளும் செயற்பட்டதால் தீர்வு முயற்சிகள் பலனளிக்கவி ல்லை. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைச் சாத்திய மாக்கக் கூடிய ஒரேயொரு தேசியக் கட்சியாக இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே விளங்குகின்றது. உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சாதனை என்று இலங்கை பெருமைப்படக் கூடியதான சகல விடயங்களுக் கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உரித்தாளி என்பதை மறுக்க முடியாது. இலங்கையின் நவீன வரலாறு எழுதப்ப டும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதில் நிச்சியம் பிரதான இடத்தைப் பெறும்

editor.tkn@lakehouse.lk




0 commentaires :

Post a Comment